முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது

  • 20 ஜூன் 2017

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேடப்பட்டுவந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், மேற்கு வங்க காவல்துறையினரால் கோவையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption முன்னாள் நீதிபதி கர்ணன் கோயம்புத்தூரில் கைது

கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில் மலுமிச்சம்பட்டி என்ற இடத்தில் ஒரு தனியார் கல்லூரிக்கு அருகில் தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது, செவ்வாய்க்கிழமை மாலை கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், பிபிசி தமிழிடம் இதை உறுதி செய்தார்.

தமிழக காவல்துறையின் உதவியுடன் மேற்குவங்க காவல் துறை அவரைக் கைது செய்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பிற்காக கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் ஆறு மாத காலம் சிறை தண்டனை விதித்தது. அவர் கடந்த மே 10ஆம் தேதியிலிருந்து தேடப்பட்டுவருகிறார்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், இந்த மாதம் 12ஆம் தேதி ஒய்வுபெற்றார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption உச்ச நீதிமன்றம்

நீதித்துறைக்கே களங்கம் கற்பித்ததாக, கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் கர்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் நீதிபதிகளைப் பற்றியும் ஓய்வுபெற்ற நீதிபதிகளைப் பற்றியும் ஊழல் புகார்களைத் தெரிவித்து நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியதையடுத்து இந்த விவகாரம் வெடித்தது.

தொடர்பான செய்திகள்:

நீதிபதி கர்ணன் - ஏன் இத்தனை சர்ச்சைகள்?

நீதிபதி கர்ணன் விவகாரத்தில் என்ன நடக்கிறது?

சிறை தண்டனையை திரும்பப் பெற கோரி நீதிபதி கர்ணன் மனு

சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரும் நீதிபதி கர்ணனின் மனு நிராகரிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்