இந்திய குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமார்

  • 22 ஜூன் 2017

இந்திய குடியரசு தேர்தல் வேட்பாளராக முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாரை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Gov.in

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

இதையெட்டி, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக பிகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை, பாரதீய ஜனதா கட்சி சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்,

பிகாரின் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்கும் என ஏற்கெனவே முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க. (அம்மா) மற்றும் அதிமுக (புரட்சித் தலைவி) அணிகள் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு

குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் யார் ?

பிற செய்திகள்

ஆஃப்கன் ராணுவ சீருடைக்கு ஊதாரித்தனமாக செலவு: அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

மது அருந்த எல்லை கடந்து மாட்டிக்கொண்ட பிரிட்டிஷ் விளையாட்டுக் குழு

செளதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரை பற்றிய ஐந்து விஷயங்கள்

மொசூலுக்கான போர்: அல்-நூரி பள்ளிவாசலைத் தகர்த்த ஐ எஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்