அ.தி.மு.க. அம்மா அணியில் மீண்டும் முரண்பாடு

  • 23 ஜூன் 2017

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. - அம்மா அணி யாருக்கு ஆதரவளிக்கும் என்பதை கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாதான் அறிவிப்பார் என்று டிடிவி தினகரனின் ஆதரவாளர்களில் ஒருவரான வெற்றிவேல் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இன்று காலையில்(வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், "குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாதான் அறிவிக்க முடியும்" என்று குறிப்பிட்டார்.

மேலும், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி கட்சியில் தலைமை நிலையச் செயலாளர் என்ற பொறுப்பில்தான் இருக்கிறார்; பொதுச்செயலாளர், துணை பொதுச் செயலாளர் என்ற பொறுப்புகளுக்குப் பிறகு, அது மூன்றாவது இடத்தில்தான் வருகிறது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்:

குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் யார் ?

இந்திய குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமார்

பா.ஜ.கவுக்கு ஆதரவு ஏன் ? : ஓ. பன்னீர்செல்வம் விளக்கம்

பாரதீய ஜனதாக் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். அதில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிச்சாமி இன்று தில்லி சென்றிருக்கும் நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றனர்.

அ.தி.மு.க. அம்மா அணியில் தினகரனுக்கு ஆதரவாக தற்போது 34 சட்டமன்ற உறுப்பினர்களும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.

பிற செய்திகள்:

''என் துப்பட்டாவிற்குள் ஒளிய பார்க்கும் சமூகம்''

கத்தார் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஏன் ?

மதுக்கடைகளை உடைக்கும் பெண்கள்; அரசியல் கட்சிகள் அலட்சியம் ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்