”எங்கள் மீது பச்சாதாபம் வேண்டாம்”: `மெட்ரோ' திருநங்கைகள் கோரிக்கை

  • 26 ஜூன் 2017

சமீபத்தில் கொச்சி மெட்ரோவால் பணியமர்த்தப்பட்ட திருநங்கை ஊழியர்களின் யூ ட்யூப்வீடியோ, மில்லியன் தடவைக்கும் மேலாக பார்க்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை KERALA INFORMATION

"என்னை பார்த்தால் உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா?" என ஊழியர் ஒருவர் விடியோவின் தொடக்கத்தில் கேட்கிறார். இந்த சீருடையில் இருப்பதை பார்த்து? என அதை பின் தொடர்கிறார் மற்றொரு ஊழியர்.

"பச்சாதாபத்துடன் நீங்கள் என்னை பார்க்க வேண்டாம்" என்கிறார் ஒருவர்.

இவ்வாறாக சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட திருநங்கைகளில் 16 பேர் ஒரு வீடியோவில் கேட்கிறார்கள்; அந்த வீடியோ 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்த வீடியோ தென்னிந்திய மாநிலமான கேரளாவின் அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கடற்கரை நகரமான கொச்சியில் மெட்ரோவில் பணிபுரிய திருநங்கைகள் பணியமர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

ரயில் சேவை விரிவுபடுத்தப்படுவதால் மேலும் 60 திருநங்கைகளை பணியில் சேர்க்கவும் மெட்ரோ திட்டமிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், சட்டப்பூர்வமாக திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தாலும் திருநங்கைகளை வேற்றுமைப்படுத்துவதும், அவர்களுக்கு எதிரான வன்முறையும் அதிகரித்து வருகிறது; மேலும் திருநங்கைகளுக்கு வேலைக் கிடைப்பது அவ்வளவு சுலபமான ஒரு விஷயமும் கிடையாது.

மதிப்பீடு ஒன்றின்படி நாட்டில் இரண்டு மில்லியன் திருநங்கைகள் உள்ளனர்.

படத்தின் காப்புரிமை JASMINE
Image caption இதனால் தன்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது என்கிறார் ஜாஸ்மின்

"என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது. எனக்கு வேலை கிடைத்துவிட்டது, என்னுடைய பெற்றோர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். நான் ஒரு சாதாரண மனிதரை போல் உணர்கிறேன்" என ஜாஸ்மின் என்ற ஊழியர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"கடந்த வருடம் திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது என்ற செய்தியே திருநங்கைகளை பணியில் அமர்த்துவதற்கான தூண்டுதலாக இருந்தது" என கொச்சி மெட்ரோவின் செய்தி தொடர்பாளர் ரெஷ்மி தெரிவித்தார்

வேலையின்மைப் பிரச்சனை, தங்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

"திருநங்கைகளுக்கு பணி வழங்கப்படவில்லை என்றால் அவர்கள் துன்பப்படுவார்கள் என கொச்சி நகர ஆணையர் எங்களிடம் வந்து விளக்கமளித்தார்" என கொச்சி மெட்ரோ நிர்வாக இயக்குநர் எலியாஸ் ஜார்ஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இது வெற்றிகரமாக அமைந்துள்ளது. அவர்கள் சிறப்பாக வேலை செய்கிறார்கள். திருநங்கைகளை பணியில் அமர்த்துவது குறித்து பிற முதலாளிகளிடமிருந்தும் எங்களுக்கு பல கேள்விகள் வருகின்றன" என என தெர்வித்தார் ஜார்ஜ்.

படத்தின் காப்புரிமை KOCHI METRO TWITTER
Image caption சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோதியால் கொச்சி மெட்ரோ துவக்கி வைக்கப்பட்டது

"திருநங்கைகள் சமுதாயத்தின் பிரதிநிதிகளாக அவர்கள் தங்களை உணர்கின்றனர். மேலும் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளின் மதிப்பையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்" என்கிறார் ஜார்ஜ்.

கேரள தகவல் பக்கத்தில் பிச்சை எடுக்கும் திருநங்கைகளைப் பற்றி பதிவிடப்பட்டாலும் இதற்கான ஆதரவும் ஊக்கமும் அதிகரித்துள்ளது.

"ஒவ்வொரு மாநிலமும் கேரளாவை பார்த்து நடந்து கொள்ள வேண்டும். மிகப்பெரிய முயற்சி" என முகநூல் வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தைரியமான முயற்சி. "அவர்கள் நமது நாட்டின் குடிமக்கள். எனவே அவர்கள் மரியாதையுடன் வாழ அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்"என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்

சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட ஊழியர் ஒருவர், இதைவிட அதிக உயர்வை தான் எதிர்பார்த்ததாகத் தெரிவித்தார்.

"நான் என்னுடைய பணி குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் முழுவதுமாக இல்லை என நீனா தெரிவித்தார். நான் விடுதி மேலாண்மையில் பட்டப்படிப்பு முடித்துள்ளேன் எனவே கொச்சி மெட்ரோவில் உயர் பதவியை எதிர்பார்த்தேன்." என்கிறார் அவர்.

இதையும் படிக்கலாம்:

"அரச குடும்பத்திற்கு வெளியே இருக்க விரும்பினேன்": இளவரசர் ஹாரி

ஈத் பெருநாள் கொண்டாட்டங்கள்: புகைப்படத் தொகுப்பு

உலகின் மிக `அசிங்கமான` நாய் தேர்வு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்