கூட்டுறவுக் கடன் தள்ளுபடி யாருக்கு? உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

அனைத்து விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களையும் தள்ளுபடி செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Image caption சென்னையில் விவசாயிகள் நடத்திய போராட்டம் (கோப்புப்படம்)

தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போர் உள்பட அனைத்து விவசாசயிகளுக்கும் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், கடன் தள்ளுபடித் திட்டம், ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு மட்டுமே என்றும், அவர்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் கடன் பெற்றிருப்பதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு, மாநில அரசின் பொருளாதாரக் கொள்கை முடிவுகளில் தலையிடுவதாகவும் என்றும் மாநில அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்காவிட்டால், மாநில அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை MD MUSTAKIM N

கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதும், ஐந்து ஏக்கருக்குக் குறைவான நிலம் வைத்திருக்கும், விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்ய உத்தரவிட்டது, ஏற்கெனவே, அதிமுக தேர்தல் அறிக்கையிலும் கடன் தள்ளுபடி குறித்து உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்