26 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

  • 3 ஜூலை 2017

பெண்ணின் கருவில் வளரும் 26 வார சிசு குறைபாடுகளுடன் உள்ளதால், அதை கலைக்க இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. அரிதான வழக்காக இந்த விவகாரத்தைக் கருதி, இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது.

படத்தின் காப்புரிமை Scott Olson/Getty Images)

இது தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது.

மருத்துவ அறிக்கை

அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த மருத்துவர்கள் குழுவின் அறிக்கையை நீதிபதிகள் பரிசீலித்தனர்.

அந்த அறிக்கையில், பெண்ணின் கருவில் வளரும் சிசுவுக்கு இதய குறைபாடுகள் உள்ளதாகவும், அந்த சிசு கருவில் தொடர்ந்து வளர்ந்தால், அதன் தாய் மன ரீதியாக காயம் அடைவார் என்றும் குறி்ப்பிடப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை Fotopress/Getty Images

மேலும், இதே உடல் வளர்ச்சியுடன் குழந்தை பிறந்தால், அதற்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள நேரிடும் என்றும் அதன் பிறகும் குழந்தைக்கு உடல் பாதிப்புகள் நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் உத்தரவு

இந்த அறிக்கையை கவனத்தில் கொண்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "மருத்துவக் குழுவின் அறிக்கை அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்று, கருவிலேயே சிசுவை மருத்துவ முறையில் கலைக்க அனுமதி அளிக்கிறோம். கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டனர்.

சட்டம் சொல்வது என்ன?

இந்தியாவில் பன்னிரண்டு முதல் இருபது வாரங்கள் வரையிலான கருவை கலைக்க சட்ட அனுமதி உள்ளது.

படத்தின் காப்புரிமை Win McNamee/Getty Images

அதுவே, பன்னிரண்டு முதல் இருபது வாரங்கள் வரை உள்ள சிசுவை கலைக்க வேண்டுமானால், அந்த சிசு பிறப்பதால் தாயின் உயிருக்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும் என்பதை இரு வெவ்வேறு மருத்துவர்களின் அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

இருபது வாரங்கள் கடந்த சிசுவை கருவில் கலைப்பது, மருத்துவ ரீதியில் கருக்கலைப்பு சட்டத்துக்கு எதிரான செயலாகும்.

எனவே, இந்த சட்டத்துக்கு எதிராக கொல்கத்தா தம்பதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பேறு காலத்துக்கு பிறகு இதய பிரச்னைகளுடன் பிறக்கும் குழந்தையும் தாயும், விவரிக்க இயலாத வலிகளுக்கும் துன்பத்துக்கும் ஆளாக நேரிடும் என்று கூறி கருக்கலைப்புக்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.

குழந்தை பராமரிப்பின் அங்கமாகும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குழந்தை பராமரிப்பின் அங்கமாகும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்