தாலி ஆணுக்கும் வேலி!
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாலி ஆணுக்கும் வேலி! – புதுவை அருகே 'புதுமைத் திருமணம்'

  • 12 ஜூலை 2017

கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த இந்த திருமணத்திற்கான மேடையை சுற்றி அனைத்திலும் இயற்கை சார்ந்த விஷயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

சாதி அடையாளம் இல்லாமல், தமிழ் மற்றும் தமிழர்களின் கலாசார அடையாளங்களுடன் மணமகன் செ.ஆ.திருஞான சம்பந்தனுக்கும், மணமகள் க.புவனேஸ்வரிக்கும் இத்திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு தாலி மற்றும் மெட்டி அணிவது போன்ற சம்பிரதாயங்கள் மிக முக்கியமானவை என இருவரது குடும்பத்து பெரியவர்களும் கூறிவிட்டனர். அதனால் சாதி, மத அடையாளங்கள் இல்லாமல் உருவாக்கப்பட்ட 'சமத்துவ' தாலியை அணிய ஒப்புக்கொண்டோம். அதே சமயம் மணப்பெண்ணிற்கு மட்டுமே அணியும் பொதுவான வழக்கத்தை மாற்றி, சமத்துவமாக இருவருமே அணிந்துக்கொண்டோம் என்கிறார் மணமகன்திருஞான சம்பந்தன்.

அனைத்திலும் பெண்ணிற்கு முன்னுரிமை வழங்கப்பட்ட இந்த விழாவில், 'பறை' இசைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

பொதுவாக திருமணங்களில் மங்கல இசைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும், ஆனால் இங்கு 'பறை' இசைக்கு அது வழங்கப்பட்டது. எங்களுடைய நண்பர்களே அந்த பறை இசையை முழங்கினார்கள். நானும், புவனேஸ்வரியும் கூட பறை இசை கலைஞர்கள்தான். அதிகமாக சாவிற்கு மட்டுமே இசைக்கப்படும் பறை இசையை, திருமண விழாவிலும் இசைக்கலாம் என காட்டி, வரவேற்பையும் பெற்றோம் என்று மணமகன் திருஞான சம்பந்தன் கூறினார்.

ஆண்கள் திருமணம் செய்து கொள்வதை, கால் கட்டுப் போடுவது என்பார்கள். இனி கழுத்திலும் கட்டுவது தேவையாகிறதோ!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :