புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ. விவகாரம்: சட்டப் பேரவையை முற்றுகையிட முயற்சி

  • 12 ஜூலை 2017
புதுச்சேரி எம்.எல்.ஏ. நியமன விவகாரம்: சட்ட பேரவையை முற்றுகையிட முயற்சி

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை சபாநாயகர் வைத்தியலிங்கம் திருப்பி அனுப்பியதையடுத்து, அவரைக் கண்டித்து பா.ஜ.கவினர் மறியலில் ஈடுபட்டுள்ளனர். முதல்வரின் கொடும்பாவியும் கொளுத்தப்பட்டது.

புதுச்சேரியின் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளிக்கூடம் ஒன்றின் தாளாளர் செல்வகணபதி ஆகியோரை சமீபத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நியமித்தார்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த சபாநாயகர் வைத்தியலிங்கம் அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்புத் தெரிவித்தார்.

இதையடுத்து, துணை நிலை ஆளுநர் கிரண்பேடியே அந்த மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ஏற்கனவே முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் மோதல் நீடித்து வந்த நிலையில் இந்த விவகாரம் மேலும் புயலைக் கிளப்பியிருந்தது.

இந்த நிலையில், இந்த நியமனங்களை ஏற்க முடியாது எனக் கூறி, இது தொடர்பான ஆவணங்களை சபாநாயகர் வைத்தியலிங்கம் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பினார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுச்சேரி பா.ஜ.கவினர் இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனால், சட்டமன்றத்தை நோக்கிச் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

"இது ஆளும் கட்சி நடத்தும் பந்த் அல்ல" - நாராயணசாமி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
”இது ஆளும் கட்சி நடத்தும் பந்த் அல்ல” - நாராயணசாமி

இன்று காலையில் 200க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் சட்டப்பேரவையை முற்றுகையிட, ஊர்வலமாக வந்தனர். சட்டப்பேரவைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றபோது காவல்துறையினருக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அங்கு அவர்கள் முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்தியலிங்கம் ஆகியோரது உருவ பொம்மைகளையும் எரித்தனர்.

இதற்குப் பிறகு அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த நியமனங்களை எதிர்த்து, சட்டமன்ற உறுப்பினரான லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தாலி ஆணுக்கும் வேலி! - புதுவை அருகே 'புதுமைத் திருமணம்'

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தாலி ஆணுக்கும் வேலி! – புதுவை அருகே 'புதுமைத் திருமணம்'

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :