இலங்கையில் கடும் வறட்சி: வில்பத்து தேசிய சரணாலயத்தை தற்காலிகமாக மூட முடிவு

  • 15 ஜூலை 2017

தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் வில்பத்து தேசிய சரணாலயத்தை தற்காலிகமாக மூடிவிட இலங்கையின் வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது

படத்தின் காப்புரிமை SIMON MAINA/AFP/Getty Images
Image caption கோப்புப்படம்

இதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் தேதி தொடங்கி இந்த சரணாலயம் தற்காலிகமாக மூடப்படுவதாக இந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது நிலவுகின்ற கடும் வறட்சி காரணமாக சரணாலயத்துக்குள் வாழும் வன விலங்குகளுக்கு தேவையான நீர் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த சரணாலயத்துக்குள் அமைந்துள்ள உல்லாச விடுதிகளில் தங்கியுள்ளோரை உடனடியாக வெளியேறுமாறு ஆணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ள இந்த திணைக்களம், சரணாலயம் மீண்டும் திறக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படுமென்று கூறியுள்ளது.

இதேவேளை கடும் வறட்சி காரணமாக நாடு முழுவதும் சுமார் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :