தனிக்கொடி கேட்கும் கர்நாடக மாநிலம்

படத்தின் காப்புரிமை Getty Images

தென்னிந்திய மாநிலமான கர்நாடகம், தங்கள் மாநிலத்திற்கான தனிக் கொடியை பெற முடியுமா என ஆராய்ந்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில், தேசிய எதிர்கட்சியாக கருதப்படும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அம்மாநிலத்தில், அதன் கலாசாரத்தை கொண்டாடும் வகையில் ஏற்கனவே சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அதிகாரப்பூர்வமற்ற ஒரு கொடி பரவலாக காணப்படுகிறது.

தற்போது இந்திய அரசியல் அமைப்பில் சிறப்பு அந்தஸ்து பெற்றிருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குதான் தனி கொடியுள்ளது.

ஆனால் இம்மாதிரியான தனிக்கொடிகள் இந்தியாவின் ஒற்றுமையை குறைத்துவிடும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசின் பல முடிவுகளால் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கோபத்திற்கு மத்தியில், குறிப்பாக ஹிந்தி திணிப்பிற்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வயிற்றுக்கட்சி

கடந்த 1960-களில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அடுத்து நாராயண கவுடா என்பவர் மொழி உணர்வுக்கு ஆதரவாக ஒரு கொடியை அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் அந்த இயக்கத்தை வயிற்றுக் கட்சி என்ற பெயருடன் அரசியல் இயக்கமாக மாற்றினார்.

அதன்பிறகு, நாராயண கவுடாவின் வழியைப் பின்பற்றிய வாட்டாள் நாகராஜ், கன்னட போராட்டக் கட்சி என்ற இயக்கத்துக்காக அந்தக் கொடியைப் பயன்படுத்தினார். தற்போது, எல்லா கன்னட அமைப்புக்களும் அதை பயன்படுத்துகின்றன.

அதன் தொடர்ச்சியாகவே, கர்நாடக மாநிலத்துக்கென தனிக்கொடியைப் பெறுவதற்கான முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்