செருப்பால் அடித்துக்கொண்டு தமிழக விவசாயிகள் போராட்டம்

  • 20 ஜூலை 2017
டெல்லி ஜந்தர் மந்திரில் தமிழக விவசாயிகள் தங்களை தாங்களே செருப்பால் அடித்து போராட்டம்

டெல்லிஜந்தர் மந்தரில் ஐந்தாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வரும் தமிழக விவசாயிகள், இன்று தங்களை தாங்களே செருப்பால் அடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

விவசாயத்தையும் விவசாயிகளின் பிரச்சனைகளையும் தமிழக அரசு துளியளவும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாகக் கண்டனம் தெரிவித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்த சட்டப்பேரவை கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

தங்களுக்கு தாங்களே சம்பளத்தை உயர்த்திக்கொள்வோருக்கு ஓட்டுப்போட்ட பாவத்திற்காக தங்களைத் தாங்களே செருப்பால் அடித்துக்கொள்வதாக விவசாயிகள் அறிவித்தனர்.

செருப்பால் அடித்துக்கொண்டு தமிழக விவசாயிகள் போராட்டம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
செருப்பால் அடித்துக்கொண்டு தமிழக விவசாயிகள் போராட்டம்

தொடர்புடைய செய்திகள்

ஏற்கெனவே, ஏப்ரல் 23-ஆம் தேதி வரை 41- நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள், தாற்காலிகமாக தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு தமிழகம் திரும்பினார்கள்.

சென்னையிலும் போராட்டம் நடத்திய பின்னர், கோரிக்கைகள் பெரிய அளவில் நிறைவேறாத பட்சத்தில், மீண்டும் டெல்லிக்கு வந்து தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

ஜூலை 16 ஆம் நாள் மீண்டும் போராட்டம் நடத்துவதற்காக டெல்லி வந்தடைந்த தமிழக விவசாயிகள், டெல்லி ரயில் நிலையத்திலி்ருந்து மெட்ரோ ரயில் மூலம் லோக் கல்யான் மார்கில் உள்ள பிரதமர் வீட்டிற்கு அருகே சென்று தர்ணாவில் ஈடுபட முயன்றபோது, காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஜூலை 16 ஆம் தேதி திங்கட்கிழமை காலை முதல் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் தங்களது போராட்டத்தை விவசாயிகள் துவக்கினார்கள்.

மனிதனே ஏர் உழும் பரிதாப நிலை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மனிதனே மாடாக மாறி ஏர் உழும் ஏழை விவசாயின் பரிதாப நிலை (காணொளி)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்