மலிவு விலை ஜியோ மொபைல்: அறிந்து கொள்ள 5 தகவல்கள்!

மாதம் 153 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் , இலவச கால்கள், வரையறையற்ற 4ஜி இணைய வசதி மற்றும் இலவச குறுஞ்செய்தி ஆகிய வசதிகள் கிடைக்கும்.

பட மூலாதாரம், MANPREET ROMANA

படக்குறிப்பு,

மாதம் 153 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் , இலவச கால்கள், வரையறையற்ற 4ஜி இணைய வசதி மற்றும் இலவச குறுஞ்செய்தி ஆகிய வசதிகள் கிடைக்கும்.

ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ள இந்த செல்போன் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய தகவல்களைப் பார்க்கலாம்..!

1. ஜியோ மொபைல் முற்றிலும் இலவசம். ஆனால் இதனைப் பெறுவதற்கு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரும்பப் பெறக்கூடிய வகையில், 1500 ரூபாய் டெபாசிட்டாக வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.

2. மாதம் 153 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் , இலவச கால்கள், வரையறையற்ற 4ஜி இணைய வசதி மற்றும் இலவச குறுஞ்செய்தி ஆகிய வசதிகள் கிடைக்கும்.

3. ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். செப்டம்பர் முதல் விநியோகிக்கப்படும்.

4. இந்த செல்போன் 4ஜி வோல்ட் தொழில்நுட்பத்தில் செயல்படக் கூடியது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 5 மில்லியன் ஜியோ செல்ஃபோன்கள் தயாரிக்கப்பட உள்ளன.

5. இந்த புதிய செல்ஃபோனில் ஜியோ தொலைக்காட்சி உள்ளிட்ட அந்நிறுவனத்தின் மற்ற வசதிகளை இலவசமாகப் பெறலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :