பக்கிங்காம் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்படும் இளவரசி டயானாவின் உடைமைகள்

டயானாவின் மேசை

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு,

பக்கிங்காம் அரண்மனையில் நடைபெறும் இந்த கண்காட்சி டயானா இறப்பின் 20வது ஆண்டு நினைவு நாள் வருகின்ற நேரத்தில் நடைபெறுகின்றது

இளவரசி டயானாவுக்கு சொந்தமான மற்றும் அவரால் பயன்படுத்தப்பட்ட ஒலி நாடாக்கள், மதிய உணவு பாத்திரம் மற்றும் பாலே காலணிகள் பக்கிங்காம் அரண்மனையில் பொது மக்களுக்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

சனிக்கிழமை தொடங்குகின்ற கண்காட்சியில் மிகவும் அரிதாகவே காணக் கிடைக்கும் இளவரசி டயானாவின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு,

இளவரசர்களான வில்லியமும், ஹாரியும் இளவரசி டயானாவின் தனிப்பட்ட நினைவுகளை பிரதிபலிக்கும் அவருடைய மேசையிலுள்ள சில பொருட்களை தெரிவு செய்துள்ளனர்

இந்தக் கண்காட்சி டயானா இறப்பின் 20வது ஆண்டு நினைவு நாள் வருகின்ற நேரத்தில் நடைபெறுகின்றது.

மேலும், டயானா தன்னுடைய மகன்களான கேம்பிரிட்ஜ் கோமகன் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரியுடன் இருக்கக்கூடிய புகைப்படங்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

பட மூலாதாரம், PA

இதில் வைக்கப்படும் பொருட்களில் பல, இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியால் தெரிவு செய்யப்பட்டவையாகும்.

வேல்ஸ் இளவரசியான டயானா, கென்சிங்டன் அரண்மனையிலுள்ள அவருடைய அறையில் அமர்ந்து வாசித்த மற்றும் அதிகாரபூர்வ தகவல் தொடர்புகளுக்கு பதிலளித்த மேசைதான், இந்தக் கண்காட்சியில் இடம்பெறும் அவரது பொருட்களின் தொகுப்பின் மையமாக விளங்கிறது.

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு,

கென்சிங்டன் அரண்மனையிலுள்ள இளவரசி டயானாவின் உடைமைகளில் இருந்து இந்த பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன

அவருடைய ஒலிநாடா தொகுப்பில், டயானா இசையை நேசித்தது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், டயானா ரோஸ், லியோனல் ரிச்சி மற்றும் எல்டன் ஜானின் இசைத்தொகுப்புகள் உள்ளன.

அக்டோபர் முதல் தேதி வரை நடைபெறுகின்ற இந்த கண்காட்சியில். 65 ஆண்டுகால ஆட்சியில் இங்கிலாந்து அரசிக்கு வழங்கப்பட்ட பரிசுகளும் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு,

டயானா ஸ்பென்சர் என்று அறியப்பட்ட டயானாவின் குழந்தைப் பருவத்திலிருந்து சில பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன

டைனோசர் எலும்பினால் செய்யப்பட்ட பேப்பர்வெயிட், பிரிட்டிஷ் விண்வெளி வீரர் விண்வெளியில் அணிந்த ஐக்கிய ராஜ்ஜிய கொடியின் பேட்ஜ் ஆகியவை இந்த பரிசுப் பொருட்களில் அடங்குகின்றன.

இளவரசி டயானா: உடையும்-ஆளுமையும்

காணொளிக் குறிப்பு,

இளவரசி டயானா: உடையும்-ஆளுமையும்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :