ரூ.45 கோடி கச்சா எண்ணெய் திருட்டை கண்டுபிடித்த போலீஸ்

ராஜஸ்தானில் உள்ள கெய்ர்ன் இந்தியா எண்ணெய் வயல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ராஜஸ்தானில் உள்ள கெய்ர்ன் இந்தியா எண்ணெய் வயல்

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு எண்ணெய் வளமிக்க பகுதியான ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் டேங்கர்கள் மூலம் பல மில்லியன் கணக்கான லிட்டர் கச்சா எண்ணெய் திருடியதாக குற்றஞ்சாட்டப்படும் திருட்டு கும்பலை போலீஸார் பிடித்துள்ளனர்.

பார்மர் மாவட்டத்தில் உள்ள கெய்ர்ன் இந்தியா எண்ணெய் வயலை மையமாக கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது. 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆறாண்டு காலத்தில் சுமார் 50 மில்லியன் லிட்டர் எண்ணெய் திருடப்பட்டுள்ளதாகவும், அவை உள்ளூரில் உள்ள இரண்டு தொழிற்சாலைக்கு விற்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட கச்சா எண்ணெயின் மதிப்பு சுமார் 70 லட்சம் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இந்த விவகாரத்தில் மேலும் டஜன்கணக்கானோர் கைது செய்யப்படலாம் என்று மாவட்ட போலீஸ் தலைவர் கங்காதீப் சிங்கலா ஏ எஃப் பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட டேங்கர்கள்

எண்ணெய் வயலிலிருந்து கழிவுகளை அகற்ற டேங்கர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், இந்த திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கள் ஒவ்வொரு டேங்கர்களிலும் ஐந்தில் இரண்டு தனியறைகளில் கச்சா எண்ணெயை நிரப்பியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கெய்ர்ன் இந்தியா எண்ணெய் வயல்

39 டேங்கர்கள் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், அதில் 33 டேங்கர்கள் கைப்பற்றப்பட்டுவிட்டதாகவும் போலீஸார் கூறியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது.

திருடப்பட்ட கச்சா எண்ணெய் விற்கப்பட்டதாக கூறப்படும் உள்ளூர் தொழிற்சாலை நிறுவனங்கள், எண்ணெயை இந்தியா முழுக்க டீசல் தயாரிப்புக்கும் மற்றும் சாலை கட்டுமான பணிக்கும் பயன்படுத்த விற்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்