பள்ளிகளில் கழிவறை கட்டாயமென்று நீதிமன்றம் கூறுமா? - வினவும் ட்விட்டர்வாசிகள்

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ள நிலையில், சமூக ஊடகமான ட்விட்டரில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் பயன்பாட்டாளர்கள் தங்கள் கருத்துக்களைபதிவு செய்து வருகின்றனர்.

விக்னேஷ் என்ற ட்விட்டர் பயன்பாட்டாளர், வந்தே மாதரம் கட்டாயம் என்ற தீர்ப்புக்கு பா.ஜ.கவின் வரவேற்பு குறித்த செய்தியை நையாண்டி செய்த அவர், 'கழிவறை இல்லாமல் பள்ளிக்கூடங்கள் உள்ளன அதற்கு இவர்கள் வாயை திறக்க காணோம்' என்று சாடியுள்ளார்.

படத்தின் காப்புரிமை @vignesh7773

'அவசரமாய் பள்ளிகளில் வந்தேமாதரம் கட்டாயமாக்கும் முன் அவசரத்திற்கு கழிவறை கட்டி கொடுங்கடோய்' என்று பிரபாகர் என்ற பயன்பாட்டாளர் பதிந்துள்ளார்.

பிரவீன் குமார் என்ற பயன்பாட்டாளர், 'பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம் - உயர்நீதிமன்றம் கழிப்பறை வசதி எல்லாம் கட்டாயம்னு எப்போ சொல்வீங்க ஆபிசர்' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

படத்தின் காப்புரிமை @Periyar_Praveen

மற்றொரு பயன்பாட்டாளர், 'தியேட்டர்ல ஜனகன போடணும், கல்லூரில வந்தேமாதரம் பாடனும்னு சொல்ற நீதிமன்றம், அரசு ஊழியர் பசங்களை அரசு பள்ளில படிக்க வைக்கணும்னு எப்போ சொல்லும்' என்று கேட்கிறார்.

'வந்தா போறதுக்கு வழியில்லாத நாட்டில் வந்தே மாதரம் கட்டாயம் பாடனுமாம்' என்று மாய மணி பதிந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை @FZcF9AQmcfnrteV

சி.பி.செந்தில்குமார் என்ற பயன்பாட்டாளர், 'தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் என்ன பாவம் செஞ்சுது?அதையும் கட்டாயம் ஆக்கிடுங்க' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை @senthilcp

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு சில ஆதரவு கருத்துக்களும் ட்வீட்டரில் இடம்பெற்றுள்ளன.

'சுதந்திர போராட்ட காலகட்டத்தில் தேசப்பற்றை வளர்த்தெடுத்த #வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகளே!' என்று பரத்குமார் என்ற பயன்பாட்டாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை @Bharathknights
படத்தின் காப்புரிமை @Green_Tamil
படத்தின் காப்புரிமை @ChanakyaII

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்