12-ஆவது நாளை எட்டிய தமிழக விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 12-ஆவது நாளை எட்டியது.

ஜந்தர் மந்தர் சாலை போராட்ட பகுதியில்
படக்குறிப்பு,

ஜந்தர் மந்தர் சாலை போராட்ட பகுதியில்

விவசாய கடன்கள் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழுவினர் டெல்லிக்கு கடந்த 16-ஆம் தேதி வந்தனர்.

முதலாவது நாளே லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமர் நரேந்திர மோதியின் இல்லத்தை முற்றுகையிடுவதாகக் கூறி அவர்கள் பேரணியாகப் புறப்பட்டனர். ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்து நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அதைத்தொடர்ந்து, போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதியை விட்டு வேறு எங்கும்செல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் விவசாயிகளை டெல்லி காவல்துறையினர் விடுவித்தனர்.

இதையடுத்து கடந்த 17-ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் பொதுமக்களை ஈர்க்கும் விதமாக வெவ்வேறு வித போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அது பற்றிய புகைப்படத் தொகுப்பு, உங்கள் பார்வைக்கு.

11-ஆம் நாள் போராட்டத்தில்

படக்குறிப்பு,

தரையில் உருளும் விவசாயிகள்

10-ஆவது நாள்

படக்குறிப்பு,

தமிழ்நாடு இல்லத்தில் முதல்வரை சந்திக்க வாயிலில் காத்திருக்கும் விவசாயிகள்

9-ஆவது நாள்

படக்குறிப்பு,

அரை மீசை வளித்து வலியுறுத்தும் போராட்டம்.

8-ஆவது நாள்

படக்குறிப்பு,

முழு மொட்டை அடித்து போராட்டம்

7-ஆவது நாள்

படக்குறிப்பு,

அரை மொட்டை அடிக்கும் போராட்டம்

6-ஆவது நாள்

படக்குறிப்பு,

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் போாராட்டம்

5-ஆவது நாள்

படக்குறிப்பு,

காலணியால் அடித்துக் கொள்ளும் போராட்டம்

படக்குறிப்பு,

காலணியால் அடித்துக் கொள்ளும் போராட்டம்

நான்காவது நாள்

படக்குறிப்பு,

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினர் ஏர் களைப்பை பிடித்து போராட்டம்

மூன்றாவது நாள்

படக்குறிப்பு,

உயிரிழந்த விவசாயிகளின் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள்

இரண்டாவது நாள்

படக்குறிப்பு,

இரும்புச் சங்கிலியால் கை, கால்களைக் கொண்டு போராட்டம்

முதலாவது நாள்

படக்குறிப்பு,

பிரதமர் இல்லத்தை முற்றுகையிட புறப்பட்டதால் நாடாளுமன்ற வீதி காவல்நிலையத்தில் வைக்கப்பட்ட விவசாயிகள்

படக்குறிப்பு,

புதுடெல்லி ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள்

காணொளிக் குறிப்பு,

செருப்பால் அடித்துக்கொண்டு தமிழக விவசாயிகள் போராட்டம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :