குஜராத்தில் கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெராயின் ஆப்கனில் இருந்து வந்ததா?

ஹெராயின் படத்தின் காப்புரிமை AFP
Image caption உலகின் மிகப்பெரிய ஓபியம் உற்பத்தியாளரான ஆப்கானிஸ்தான் இந்தியாவிற்கு அருகில் இருப்பதால், போதைப் பொருள் கடத்தல் இந்திய நாட்டின் வழியாக நடைபெறுகிறது. (கோப்புப்படம்)

குஜராத் மாநில கடற்பகுதியில், ஒரு கப்பலில் இருந்து 1,500 கிலோ ஹெராயினை இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு வணிக கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த ஹெராயினின் மதிப்பு கிட்டதட்ட 550 மில்லியன் டாலர் இருக்கும் என கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

``இவ்வளவு போதைப் பொருள்கள் ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை`` என கடற்படை செய்தி தொடர்பாளர் டி.கே.சர்மா கூறுகிறார்.

ஹெராயினின் முக்கிய மூலப்பொருளாக ஓபியம் உள்ளது. உலகின் மிகப்பெரிய ஓபியம் உற்பத்தியாளரான ஆப்கானிஸ்தான் இந்தியாவிற்கு அருகில் இருப்பதால், போதைப் பொருள் கடத்தல் இந்திய நாட்டின் வழியாக நடைபெறுகிறது.

ஆப்கானிஸ்தானில் தயாராகும் ஹெராயின்கள், இந்தியப் பெருங்கடல் வழியாக கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்காவுக்குக் கடத்தப்படுவதாக ஐ.நாவின் போதைப் பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் கூறுகிறது.

வட மாநிலமான பஞ்சாப், ஹெராயினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

பஞ்சாபில், 15 முதல் 35 வயது வரையிலான 860,000 ஆண்கள் சில வகையான போதை பொருள்களை எடுத்துக்கொள்வதாகவும், ஹெராயின் கலந்த போதை பொருள்களுக்கு 53% பேர் அடிமையாகியிருப்பதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :