பட்டாசு உற்பத்தி கட்டுப்பாடு: 10 முக்கிய தகவல்கள்

 • 1 ஆகஸ்ட் 2017
பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள்

பட்டாசு உற்பத்தியின்போது நச்சுத்தன்மை மிக்க லித்தியம், மெர்குரி, ஆர்செனிக், ஈயம் போன்ற ரசாயனங்களை பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில், அதன் தாக்கம் பற்றி பிபிசி தமிழிடம் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கபொதுச் செயலாளர் கே.மாரியப்பன் கூறுகையில், கீழ்கண்ட அம்சங்களை முக்கியமென வலியுறுத்தினார்.

 • நச்சுத்தன்மை வாய்ந்த பொருள்கள் எவை என்பது பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படும்.
 • அரசு குறிப்பிடும் தயாரிப்பு பொருட்கள் விக்கிபீடியாவில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் இல்லை.
 • பட்டாசு தயாரிப்புக்கான தரத்தை இன்னும் மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை.
 • "ஸ்ட்ரோன்ஷியம்" உலோகத்துடன் கலக்கப்படும் ரசாயனம் எது என விளக்க வேண்டும்.

தொடர்புடைய தலைப்புகள்

சிவகாசி அருகில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து: 5 பேர் பலி

தலைநகர் தில்லியில் இனிவரும் காலங்களில் பட்டாசு விற்பனைக்கு தடை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மேலும் தீபாவளி பண்டிக்கைக்கு முந்தைய மாதங்களில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் இதுபோன்ற உத்தரவுகளால் ஏற்கெனவேலட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருகின்றனர் என்கிறார் இந்திய பட்டாசு தொழிற்சாலைகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.கண்ணன்.

 • விருதுநகரில் நேரடியாக 2 லட்சம் பேரும், மறைமுகமாக 1.5 லட்சம் பேரும் பட்டாசு தொழிலில் உள்ளனர்.
 • இந்தியா முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 60 லட்சம் பேர் இத்கொழிலில் உள்ளனர்.
 • டெல்லியில் புகை மாசுவால் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தது முதல் பாதிப்பு தொடங்கியது.
 • ஜிஎஸ்டி அமலாக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தொழில் பாதிப்பு தீவிரமானது.
 • நீதிமன்ற உத்தரவுகளால் பட்டாசு தொழில் உற்பத்தி, விற்பனை நலிவடைந்துள்ளது.
 • இதே நிலை நீடித்தால் பட்டாசு தொழிலே நடத்த முடியாத நிலை உருவாகும்.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஏ.பி.அகோல்கர், பட்டாசு உற்பத்திக்கான தரத்தை நிர்ணயிக்க நீதிமன்றத்திடம் அவகாசம் கோரப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அதன் விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்