காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானியின் குடும்பத்தார் சொத்து எவ்வளவு?

 • 2 ஆகஸ்ட் 2017
கிலானி குடும்பத்தினரின் சொத்து எவ்வளவு? படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி

இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவரும், ஹுரியத் மாநாடு (கிலானி பிரிவு) அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா கிலானி, அவரது இரு மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோர் அதிக சொத்து சேர்த்திருப்பதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றம் சாட்டியிருக்கிறது.

கிலானி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தேசிய புலனாய்வு முகமை கிலானி பிரிவின் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. கிலானியின் இரண்டு மகன்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கிலானியின் மருமகன், அல்தாஃப் ஹா, கட்சி செய்தித் தொடர்பாளர் அயாஜ் அக்பர், பீர் சைஃப் ஓலஹ், ராஜா மெஹ்ராஜ் கல்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹுரியத் மாநாடு (மீர்வாயிஜ் உமர் ஃபாரூக்) பிரிவின் செய்தித் தொடர்பாளர் உல் இஸ்லாம், ஜம்மு-காஷ்மீர் தேசிய முன்னணியின் நயீம் கான் ஃபாரூக் அஹ்மத் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

ஜம்மு-காஷ்மீர் டெமோக்ரெடிக் ஃப்ரண்டின் ஷபீர் அஹ்மத் ஷாவை அமலாக்க இயக்குநரகம் சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீநகரில் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட அனைவரும் தேசிய புலனாய்வு முகமையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சயீத் அலி ஷா கிலானி, அவரின் இரு மகன்கள் மற்றும் மருமகன் மீதான தேசிய புலனாய்வு முகமையின் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர் கூட்டத்தில் கிலானி காட்டினார்.

கிலானியின் சொத்து

 • சயீத் அலி ஷா கிலானிக்கு சோபோரின் டோரோ பகுதியில் 9,000 சதுர அடி கொண்ட இரட்டை மாடி வீடு.
 • ஸ்ரீநகரில் 5000 சதுர அடி வீடு மற்றும் அலுவலகம், அதில் கிலானி மனைவிக்கும் பங்கு உண்டு.
 • புல்புல்பாக், ஸ்ரீநகரில் இரண்டு மாடி வீடு. ஆனால், இந்த சொத்து ஜமாத்-இ-இஸ்லாமியாவுடையது என்கிறார் கிலானி.
 • டோரோ ஸ்ரீநகரில் யூனீக் பப்ளிக் ஸ்கூல்.
 • தில்லியில் இரண்டு அறை கொண்ட ப்ளாட், அதற்கு எட்டு லட்ச ரூபாய் ரொக்கமாக கிலானி கொடுத்திருக்கிறார்.
 • ஸ்ரீநகரில் பாக்-இ-மஹ்தாபில் இரட்டை மாடி வீடு
 • படனின் சிங் பூராவில் 12.5 - 19.5 ஏக்கர் நிலம்
 • ரஹ்மத் ஆபாதில் இரட்டை மாடி வீடு
 • ஹைதர்போரா அலுவலகத்தில் நான்கு வாகன்ங்கள்
படத்தின் காப்புரிமை AFP

கிலானியின் மகன் டாக்டர் நயீமின் சொத்து

 • ஸ்ரீநகரில் அரை ஏக்கர் நிலம்
 • டோராவில் ஆப்பிள் தோட்டம் உட்பட 1,80,000 சதுர மீட்டர் நிலம்
 • ஸ்ரீநகர், சந்த்நகரில் எட்டு அறைகள் கொண்ட வீடு
 • டெல்லியில் வசந்த் குஞ்ச் பகுதியில் இரண்டு பிளாட்கள்
 • ஸ்ரீநகர் பர்ஜுலாவில் வீடு
 • படனில் வீடு
 • ஸ்ரீநகரின் பாகாத்தில் 12 அறைகள் கொண்ட வீடு
 • நவ்லரி, படனில் ஆப்பிள் தோட்டம், இரண்டு வீடுகள்

கிலானியின் மருமகன் அல்தாஃப் அஹ்மத் ஷாஹின் சொத்து

 • தேசிய புலனாய்வு முகமையின் கூற்றின்படி, ஸ்ரீநகர் பாஹ்-எ-மஹ்தாபில் இரட்டை மாடி வீடு
 • பட்டண்டியில் இரண்டு அறைகள் கொண்ட வீடு
 • ஸ்ரீநகரின் லால் செளக்கில் வீடு (பரம்பரை சொத்து)
 • ஹண்டோரஹ் கிராமத்தில் 36 ஆயிரம் சதுர அடி நிலம்
 • பெமினா ஸ்ரீநகரில் இரட்டை மாடி வீடு
 • ஒரு கார்
படத்தின் காப்புரிமை AFP

ஸ்ரீநகரில், ராஜா மெஹ்ராஜ் பரிசாக அளித்த 16 பிஹா நிலம், ஸ்ரீநகரில் இரட்டை மாடி வீடு, ஒரு ஆல்டோ கார் ஆகியவையும் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை கூறுகிறது.

காஷ்மீர் விடுதலை இயக்கத்தை ஒடுக்கும் அரசின் சதி என்று கூறும் கிலானி இந்தக் குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளினார்.

தேசிய புலனாய்வு முகமை கைது செய்த மற்ற பிரிவினைவாத தலைவர்கள் மீது, காஷ்மீரில் தீவிரவாத ஊக்குவிப்பு, ஹவாலா பணப்பரிமாற்றம், அமைதிக்கு ஊறு விளைவிப்பது, இந்தியாவுக்கு எதிராக யுத்தம் செய்வது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

காஷ்மீரில் நிலைமையை சீர்குலைப்பது மற்றும் ஹவாலா பணப் பரிமாற்றம் தொடர்பாக ஒரு சீக்கிய வழக்கறிஞரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்