ஆணுறை நறுமணத்தின் ரகசியம் என்ன?

  • 5 ஆகஸ்ட் 2017
படத்தின் காப்புரிமை Manforce condoms

இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கிட்டத்தட்ட முட்டாள்தனமாக பார்க்கப்படும் வகையில் ஊறுகாய் நறுமணம் கொண்ட ஆணுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேன்ஃபோர்ஸ் காண்டோம்ஸ் நிறுவனத்தின் இந்த சமீபத்திய உருவாக்கம் ஆணுறை சந்தையில் பரிச்சயமில்லாத பெருங்கூட்டத்தை ஆச்சரியப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

டியுரெக்ஸ் என்ற நிறுவனம் மட்டும் ஏற்கெனவே கத்தரிக்காய் மற்றும் வெங்காய நறுமணங்களில் பாரம்பரிய ஸ்ட்ராபெரி மற்றும் வாழைப்பழ நறுமணங்களில் ஆணுறைகளை விற்பனை செய்து வந்தது.

ஆனால், இந்தியா உணவு முறையில் இந்தியில் அச்சார் எனப்படும் ஊறுகாய்க்கு எப்போதுமே ஒரு தனி சிறப்புண்டு. ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு சுவைகளில் ஊறுகாய்கள் கிடைக்கின்றன. ஆனால், காதல் செய்யும் போது அதற்கு ஒத்ததாக ஊறுகாய் பரவலாக கருதப்பட மாட்டாது.

ஆனால், சமூக ஊடகங்களில் ஊறுகாய் நறுமண ஆணுறை குறித்து பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஊறுகாய் நறுமணம் கொண்ட ஆணுறைகளை பயன்படுத்த இந்தியர்கள் தயாராக இருக்கிறார்களா?

''இதுபோன்ற விளம்பரங்கள் பெரும்பாலும் செய்திகளாக்கப்படுவதால் இது தங்கள் வியாபாரத்துக்கு மக்கள் கவனத்தை ஈர்க்கும்'' என்று கிரே விளம்பர நிறுவனத்தின் தலைவர் சுனில் லூலா பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற வியாபார யுக்திகள் விற்பனையைப் பெருக்க உதவிகரமாக இருக்கிறதா என்பதை அந்த நிறுவனங்கள்தான் தெரிவிக்க வேண்டும் என்கிறார் அவர்.

''எனினும், ஊறுகாய் ஆணுறை, பாலியல் சந்தோஷங்களைப் பெருக்கி பாதுகாப்பான பாலுறவு குறித்த விவாதங்களை இந்தியாவில் அதிகரிக்குமாயின் பின் நிறுவனத்தின் முயற்சிகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டிவை'' என்றும் கூறினார்.

''மேன்ஃபோர்ஸ் நிறுவனம் ஆணுறை விளம்பரம் குறித்து புத்திசாலியாக இருக்கிறது என நான் நினைக்கிறேன். வாடிக்கையாளர்களை பற்றி தங்களுக்கு தெரியும் என்பதை நிறுவனம் காட்டுகிறது,'' என்று இந்தியாவை சேர்ந்த கட்டுரையாளர் ராஜ்யஸ்ரீ சென் பிபிசியிடம் கூறினார்.

''ஆனால், இந்த விளம்பரத்தில் உள்ள மில்லியன் டாலர் கேள்வி எது என்றால், எந்த ஊறுகாயை நிறுவனத்தினர் இதில் குறிப்பிடுகிறார்கள்? எலுமிச்சையா? மிளகாயா? ஆணுறை நிறுவனம் பயன்படுத்தும் நறுமணம் ஒவ்வொரு இந்தியர்களையும் கவர்ந்திழுக்கும் என்பது நிறுவனத்தாருக்கு எவ்வாறு தெரியும்? இதுகுறித்து நிறுவனம் உண்மையில் யோசித்துப் பார்த்ததா?'' என்றார்.

தனிப்பட்ட முறையில், ஊறுகாய் நறுமணம் கொண்ட ஓர் ஆணுறையை தான் எப்போதும் வாங்க நினைக்க மாட்டேன் என்றும், ஆனால் டெல்லி மாணவர்களைப் போன்று சில பிரிவினர்களிடம் இந்த வகையான ஆணுறைகள் விற்கப்படுவதாகவும் ராஜ்யஸ்ரீ சென் கூறுகிறார்.

''ஊறுகாய் நறுமண ஆணுறையில் வினிகர் இருக்காது என்று நம்புகிறேன், காரணம், பின் அது ஏராளமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்'' என்கிறார் இறுதியாக.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்

இந்தச் செய்தி குறித்து மேலும்