பாலியல் வல்லுறவால் கருத்தரித்த 10 வயது சிறுமி: கருக்கலைப்பு செய்து கொள்ள மறுப்பு

  • 7 ஆகஸ்ட் 2017
குழந்தை படத்தின் காப்புரிமை iStock

பாலியல் வல்லுறவால் கருத்தரித்த 10 வயது சிறுமி கருக்கலைப்புக்கு மறுத்திருப்பது இந்தியா ஊடகங்களின் பெருங்கவனத்தை பெற்றிருக்கிறது.

இந்த சிறுமியின் வாழ்க்கை பற்றி நேரடியாக அறிய இந்தியாவின் வட மாநிலமான சண்டிகாரிலுள்ள நகருக்கு பிபிசியின் கீதா பாண்டே பயணம் மேற்கொண்டார்.

"14-15 வயதுள்ள பதின்ம வயது சிறுமிகள் பலர் கர்ப்பம் தரித்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், 10 வயது சிறுமி கருத்தரித்ததை முதல்முறையாக பார்க்கிறேன்" என்று சண்டிகர் சட்ட உதவி நிறுவனத்தின் மகாவீர் சிங் தெரிவித்துள்ளார்.

உறவினர் ஒருவரால் மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதால், 10 வயது சிறுமி கருத்தரித்தாக வெளியான சம்பவம், சண்டிகரையும், இந்தியாவையும் மிகவும் உலுக்கிய வழக்கில் மகாவீர் சிங் ஈடுபட்டுள்ளார்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய உறவினர் தற்போது விசாரணையை எதிர்நோக்கி சிறையில் உள்ளார்.

பாதிக்கப்பட்ட இந்த சிறுமி எளிதாக புன்னகை பூக்கும் மகிழ்ச்சியான குழந்தையாக விவரிக்கப்படுகிறார். அவர் வெட்கப்படுபவர். அவ்வளவாக பேச மாட்டார்.

6 ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவிக்கு ஆங்கிலமும், கணிதமும் மிகவும் விரும்பமான பாடங்கள். ஓவியங்கள் வரைவதையும் விரும்புகிற அவர் சிறப்பாகவே ஓவியங்கள் வரைகிறார்.

சோட்டி ஆனந்தி (லிட்டில் ஆனந்தி) மற்றும் ஷின் சான் கார்ட்டூன் நிகழ்ச்சிகளில், அவருக்கு விரும்பமான நிகழ்ச்சிகள் போதுமானவையாக இல்லை. கோழி இறைச்சி, மீன் மற்றும் பனிக்குழவை (ஐஸ் க்ரீம்) ஆகியவற்றை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கருக்கலைப்பு செய்துகொள்ள இந்த சிறுமியின் சார்பாக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் 32வது வாரத்தில், அவர் கருத்தரித்து அதிக நாட்கள் கடந்துவிட்டதை காரணம் காட்டி, கருக்கலைப்பு செய்ய கோரிய மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் ஜூலை 28 ஆம் தேதி நிராகரித்துவிட்டது.

தற்போதைய நிலையில், இவருக்கு கருக்கலைப்பு செய்வது, இந்த சிறுமிக்கு ஆபத்தாக முடியும் என்றும், அவரது வயிற்றிலுள்ள குழந்தை நன்றாகவே வளர்ந்து வருகிறது என்றும் அவரை சோதித்த மருத்துவர்கள் அமர்வு ஒன்று நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, இந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு பெரியதொரு ஏமாற்றமாக அமைந்துவிட்டது.

"என்ன நடந்தது என்று சிறுமிக்கு தெரியவில்லை"

20 வாரத்திற்கு மேற்பட்ட கருவை கலைப்பதை இந்திய சட்டம் அனுமதிக்கவில்லை.

குழந்தையை சுமக்கின்ற தாயின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் சான்று அளித்தால் மட்டுமே அதற்கு மேலான வாரங்களான கருவை கலைக்க அனுமதி வழங்கப்படும்.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள் பலரிடம் இருந்து 20 வாரங்களுக்கு அதிகமாக பிறகும் கருவை கலைப்பதற்கு அனுமதி வேண்டி, அதிக புகார்களை நீதிமன்றங்கள் பெற்று வருகின்றன. இந்த சூழ்நிலை பற்றி குழந்தைகளுக்கு அதிகமாக தெரியாது என்பதால், இவ்வாறு கர்ப்பம் தரித்திருப்பது மிகவும் தாமதமாகவே தெரிய வருகிறது.

இந்த 10 வயது சிறுமியின் சம்பவத்திலும், மூன்று வாரங்களுக்கு முன்னதாக, அடிவயிற்றில் வலி எடுக்கிறது என்று அவர் தெரிவித்தவுடன், மருத்துவரிடம் தாய் அழைத்து சென்ற பின்னர்தான் கருத்தரித்திருப்பது கண்டறியப்பட்டது.

"அவள் ஒரு அப்பாவி. அவருக்கு என்ன நடந்திருக்கிறது என்று அவருக்கு தெரியாது" என்கிறார் அவரிடம் அடிக்கடி பழகும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் நல்ல ஆரோக்கியமான குழந்தை என்பதால், மகப்பேற்றுக்கான தொடக்கக்கால அறிகுறிகளையும் பெற்றோர் கவனிக்க தவறிவிட்டனர். தங்களின் மகள் 10 வயதில் கருத்தரிக்க முடியும் என்பதை அவர்கள் கற்பனை செய்தும் பார்த்திருக்கவில்லை.

கருவுற்றிருப்பது இன்னும் இந்த சிறுமியிடம் தெரிவிக்கப்படவில்லை. அவரோடு பேசி, கையாள்பவர் அனைவருமே மிதமாகவே ஈடுபடுகின்றனர்.

அவருடைய வயிற்றில் பெரிய கல் இருக்கிறது என்றும், அதனால்தான், வயிறு வீங்கியுள்ளது என்றும் அவருக்கு கூறப்பட்டுள்ளது.

முட்டை, பால் பழங்கள், மீன் மற்றும் கோழி இறைச்சி என சிறப்பு உணவுகள் அவருக்கு வழங்கப்படுகிறது. அதிக கவனம் அவர் மீது செலுத்தப்படுவதால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

காதல் மனைவியின் அழகை வர்ணித்ததால் கணவருக்கு வந்த சோதனை

மோதியை எதிர்த்ததால் சமூக வலைத்தளத்தில் பாலியல் தாக்குதல்: ஜோதிமணி புகார்

ஆனால், சமீபத்திய நாட்களில், காவல்துறையினர், சமூகப் பணியாளர்கள் மற்றும் ஆற்றுப்படுத்துநர்கள் ஆகியோர் இந்த சம்பவத்திற்குள் வந்துள்ளதுடன், வீட்டிற்கு வெளியில், ஊடகங்களின் கவனம் அதிகரித்துள்ளது.

"சரியான பிரச்சனை, இந்த சூழ்நிலையின் காரணம் என்ன என்பதை அவர் புரியாமல் போகலாம். ஆனால், அவருக்கு சற்று புரிந்துள்ளது" என்று மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையை சமாளிப்பது எப்படி என்று அவருடைய பெற்றோர் போராடி வருகின்றனர். அவரது குடும்பம் சிறியதொரு அறையுடைய அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர்.

அவருடைய தந்தை அரசு ஊழியர். தாய் வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த வழக்கை விசாரித்து வருகின்ற காவல்துறை பெண் அதிகாரி பிரதிபா குமாரி, இந்த குடும்பம் மிகவும் எளிமையான நல்ல குடும்பம். தன்னுடைய மகளுக்கு இந்த மனிதர் என்ன செய்கிறார் என்று கூட உணராமல் இருந்துள்ளனர் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த பெற்றோர் மிகவும் கலங்கி குழும்பியுள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறும் அவர் "அவரது தாய் என்னிடம் எப்போதும் அழாமல் பேசியதில்லை. தன்னுடைய மகள் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உணர்வதாக தந்தை தெரிவிக்கிறார்" என்கிறார்.

இந்தியாவில் நடைபெறும் துஷ்பிரயோகங்கள்

இந்த பாலியல் வல்லுறவு மற்றும் கர்ப்பம் தரித்திருப்பது செய்தித்தாள்களின் தலைப்பு செய்திகளில் வெளிவர தொடங்கி, பத்திரிகையாளர்களால் அவர்கள் வேட்டையாடப்படுவதுது, அவர்களின் சூழ்நிலையை மிகவும் மோசமாகியுள்ளது.

"இந்த சிறுமியின் தந்தை என்னை பார்க்க வந்துபோது, ஊடகங்கள்தான் தன்னுடைய பெரிய பிரச்சனை என்று தெரிவித்தார். தன்னுடைய வீட்டுக்கு வெளியே எப்போதும் பத்திரிகையாளர்கள் காணப்படுகின்றனர். என்னுடைய அந்தரங்க உரிமை இதனால் பாதிக்கப்பட்டுள்ளது" என்று குழந்தைகள் நலவாழ்வு கமிட்டியின் தலைவர் நீல் ராபர்ட்ஸ் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த சிறுமிக்கு சிறந்த மருத்துவ பராமரிப்பு பெற வேண்டும், அரசிடம் இருந்து நிதி இழப்பீடு பெற தகுதியுண்டு என்பதை காட்டுவதாக ஊடகங்களின் இந்த கவனம் பொருள்படுகிறது.

ஆனால், விரும்பப்படாத இந்த விளம்பரம் பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்திற்கு அதிக கவலையை வழங்கியுள்ளது. தந்தை அலுவலகத்திற்கு சென்றிருக்கும் நேரத்தில் இவர்களின் வீட்டுக்கு குழந்தைகள் நல பணியாளர்கள் என்று கூறிக்கொண்டு, பல பத்திரிகையாளர்கள் வந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Amanda Edwards/Getty Images

இந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர் தாயின் உறவினர் என்பதால், இந்த துஷ்பிரயோகம் பற்றி தாய்க்கு தெரியுமா என்றும், ஒருவேளை தெரிந்தும் அனுமதித்தீர்களா என்றும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். "தன்னுடைய மகள் 7 மாதங்களாக கர்ப்பமாக இருக்கிறார் என்பதை எவ்வாறு அவர் அறியாமல் இருந்தார்? என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த கேள்வி, இந்த குடும்பத்தினரை மிகவும் தர்மச்சங்கடத்திற்கு குள்ளாக்கியிருக்கிறது. இந்த சிறுமியின் தந்தை கோபமாகவும், கடுமையாகவும் காணப்படுகிறார்.

"அவன் மிகவும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் அல்லது வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். இதனை தான் செய்ததாக, அவனே குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளான். இதற்கு மனம் வருந்துவதாக அவர் ஒருபோதும் கூறவில்லை" என்று தொலைபேசி உரையாடலில் அவர் தெரிவித்தார்.

என்னிடம் கடுமையாக பேசுவதற்கு முன்னால், "என்னுடைய மகள் தொடர்பான வழக்கை நீங்கள் ஏன் விளம்பரம் செய்கிறீர்கள்? செய்தி நிறுவனங்கள் இதனை ஒரு வியாபார முயற்சியாக உருவாக்கிவிட்டன" என்று அவர் கூறினார்.

அவருடய கோபம் நியாயப்படுத்தப்படக்கூடியதுதான். பாலியல் வல்லுறவில் இருந்து தப்பியோர், இத்தகைய குற்றங்கால் பாதிக்கப்படும் குழந்தைகள் ஆகியோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது என்று தெளிவாக சட்டங்கள் இருந்தாலும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபரின் பெயர் செய்தித்தாள்களில் அடிபட்டதால், ஆங்காங்கு கொடுக்கப்பட்ட தகவல்களை இணைத்து பார்த்து இந்த குடும்பத்தை அனைவரும் அறிய வந்துள்ளனர்.

இப்போது அவர்களின் அக்கம்பக்கத்தாரும், உடன் தொழிலாளர்களுக்கும் இவ்விடயம் தெரியும். இந்த சிறுமியின் பள்ளி நண்பர்களுக்கும் தெரிந்திருக்கலாம்.

"இந்த சிறுமியின் எதிர்காலம் மற்றும் அவர் வளர்கின்றபோது, அவர் மீதான இந்த முத்திரை பற்றி, பெற்றோர் மிகவும் கவலையடைந்துள்ளனர். அவரது உடல் நலம் பற்றியும் தந்தை பேசியுள்ளார்" என்கிறார் தொடக்க காலத்தில் இந்த குடும்பத்தை சந்தித்த உள்ளூர் பத்திரிகையாளர்.

படத்தின் காப்புரிமை Amanda Edwards/Getty Images

மிதமான அனிமீயாவால் அவர் துன்பப்பட்டாலும், இதுவரை இந்த சிறுமியின் உடல் நலம் நன்றாகவே உள்ளதை மருத்துவ சோதனைகள் காட்டுகின்றன.

ஆனால், இன்னும் பிற சிக்கல்களும் உள்ளன. இந்த சிறுமி இதயத்தில் துளையுடன் பிறந்ததால், 2013 ஆம் ஆண்டுதான் அது சரி செய்யப்பட்டுள்ளது. இதனால், மகப்பேற்றில் எந்த பிரச்சனையும் வராது என்று மருத்துவர்கள் தெரிவித்தாலும், குழந்தை பெற்றெடுக்கும் அளவுக்கு அவர் மிகவும் சிறியவர் என்பதுதான் உண்மை.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 45 ஆயிரம் வயதுக்குவந்த பெண்கள் குழந்தை பெற்றெடுக்கிறபோது இறக்கின்றனர்.

20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும்போது இறப்பதை விட 15 வயதுக்குட்பட்ட கர்பிணி சிறுமிகளுக்கு இரண்டரை மடங்கு அதிக ஆபத்து நிலவுகிறது. 10 வயது என்றால் இந்த ஆபத்து மேலும் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உச்ச நீதிமன்றத்தால் இது கவலைக்குரிய ஒன்றாக எடுக்கப்பட்டாலும், நீதிபதிகள் மகப்பேறு தொடர வேண்டும் என்றே தீர்ப்பளித்துள்ளனர்.

அடுத்து என்ன?

இந்த சிறுமிக்கு செப்டம்பர் நடுவில் குழந்தை பிறக்கும் என்று இதுபற்றி தெரிந்தோர் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Mark Makela/Getty Images

அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். ஏதாவது சிக்கல்கள் இருந்தால், முன்னதாகவே இது நடைபெறும்.

இந்த குழந்தை தங்களுக்கு வேண்டாம் என்று இந்த குடும்பத்தினர் கூறிவிட்டதால், தத்து எடுத்து வளர்ப்பதற்கு யாராது கிடைக்கும் வரை, பிறக்கும் குழந்தை, குழந்தைகள் நலவாழ்வு குழுவின் பராமரிப்பில் வளரும்.

இந்த 10 வயது சிறுமி மன உளச்சலால் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர்கள், ஒரு குழந்தைகள் உளவியலாளரின் உதவி இந்த சிறுமிக்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என்கின்றனர்.

"இந்த சிறுமிக்கு தேவைப்படும் உதவிக்காக எங்கள் கைகள் உள்ளன. 10 வயது சிறுமி குழந்தையை பெற்றெடுக்க முடியுமா? அது அவளது உயிருக்கு ஆபத்தானதாக அமையாதா? அவருக்கு எதுவும் நடந்துவிட கூடாது என்று நாங்கள் செபித்து கொண்டிருக்கிறோம்" என்று அவர்கள் கூறுகின்றனர்.

சௌதியில் சர்ச்சையை ஏற்படுத்திய குட்டைப் பாவாடைப் பெண்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண் மீது சௌதியில் விசாரணை

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :