கிணறு கோரி ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக குத்துவிளக்கு போராட்டம்

  • 7 ஆகஸ்ட் 2017
கிணறு போராட்டம்

தேனி மாவட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த கிராமமான லட்சிமிபுரத்தில் குடிநீர் கிணற்றை வழங்குவதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக அவருக்கு எதிராக பெண்கள் குத்துவிளக்கு ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னர் ஓ.பி.எஸ் மனைவியின் பெயரில் இருந்து தற்போது வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுதான் லட்சிமிபுரம் கிராமத்தில் அதிகரித்துவரும் குடிநீர் பஞ்சத்திற்குக் காரணம் என்று போராட்டக் குழுவினர் கூறுகின்றனர்.

ஒப்பந்தத்தின்படி, மக்களுக்கு ஆழ்துளைக் கிணறு அளிக்கப்படவில்லை என்று கூறி லட்சிமிபுரத்தில் திங்களன்று ஐந்து வயது முதல் 70 வயது வரை உள்ள சுமார் 1,500 பெண்கள் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர்.

இரண்டு மாதமாக நடந்த போராட்டத்தின் முடிவாக கிணற்றை மக்களுக்கு அளிப்பதாகப் பன்னீர் செல்வம் அறிவித்தார். ஆனால் அவர் அறிவிப்பு செய்வதற்கு முன்னரே அந்த நிலத்தை அவர் வேறுஒருவருக்கு விற்றுவிட்டார் என்று தெரியவந்தது என்று போரட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

ஜூலை மாதத்தின் இறுதியில், மக்களின் தொடர் போராட்டம் காரணமாக, பன்னீர் செல்வத்திடம் நிலம் மற்றும் கிணற்றை வாங்கிய நபர், அவற்றை தானாகவே மக்களிடம் ஒப்படைக்க உறுதியளித்திருந்தாக கூறப்படுகிறது.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடந்துவரும் வழக்கில் பன்னீர் செல்வத்தின் மனைவி பெயரில் இருந்த விவசாய நிலம் மற்றும் கிணற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக நடந்துவரும் வழக்கை திரும்பப்பெற்றால் மட்டுமே நிலம் ஒப்படைக்கப்படும் என்று புதிய நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாக போரட்டதில் ஈடுபட்ட கிராமவாசி ச.சுப்புராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

முன்னர் உறுதியளித்தபடி கிணறு உள்ள நிலத்தை மக்களுக்கு முறைப்படி பத்திரமாக எழுதித் தரும்வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

கிணறு கோரி ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக குத்துவிளக்கு போராட்டம் (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கிணறு கோரி ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக குத்துவிளக்கு போராட்டம் (காணொளி)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :