மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி

  • 16 ஆகஸ்ட் 2017

இன்று காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

புதன்கிழமையன்று காலை 7 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துவரப்பட்டார். அவருடைய மனைவி மனைவி ராசாத்தி அம்மாள், மகள்கள் கனிமொழி, செல்வி ஆகியோர் உடன்வந்தனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஆண்டின் இறுதியில் உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது கழுத்தில் "ட்ராக்யோஸ்டமி" செய்யப்பட்டு, குழாய் பொறுத்தப்பட்டது. PEG tube எனப்படும் அந்தக் குழாயை மாற்றுவதற்காகவே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக காவிரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்த சிகிச்சை முடிவடைந்து கருணாநிதி வீடு திரும்பியுள்ளார்.

முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதிக்கு தற்போது 94 வயதாகிறது.

தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துரையை கேட்கும் கருணாநிதி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தனது பிறந்தநாள் வாழ்த்துரைகளை கேட்கும் மு.கருணாநிதி (காணொளி)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்