உத்தர பிரதேசத்தில் நொடி பொழுதில் நிலைகுலைந்த ரயில் பெட்டிகள்

  • 20 ஆகஸ்ட் 2017

உத்தர பிரதேசம் மாநிலம் முஸாஃபர்நகரில் உள்ள கத்தோலி அருகே கலிங்க-உத்கல் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதன் புகைப்படத் தொகுப்பு.

Image caption உத்தர பிரதேசம் மாநிலம் முஸாஃபர்நகரில் உள்ள கத்தோலி அருகே கலிங்க-உத்கல் விரைவு ரயில் தடம் புரண்டது.
Image caption இந்த விபத்தில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Image caption காயமடைந்த பயணிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Image caption ரயிலில் பயணித்த பிற பயணிகள் சுமார் 2000 பேர் பேருந்துகள் மூலம் அனுப்பப்பட்டு வருவதாகவும் நீதிபதி ஜி.எஸ் பிரியதர்ஷி கூறியுள்ளார்.
Image caption மீட்புப்பணியில் தேசிய பேரிடர் படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
படத்தின் காப்புரிமை AMIT SAINI
Image caption நேற்று (சனிக்கிழமை) மாலை சுமார் 5.50 மணியளவில் கத்தோலி அருகே கலிங்க-உத்கல் விரைவு ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன.
படத்தின் காப்புரிமை AMIT SAINI
Image caption பூரியிலிருந்து ஹரித்துவாரை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த போது, கத்தோலி என்ற இடத்தில் ரயில்பெட்டிகள் தடம் புரண்டன.
படத்தின் காப்புரிமை SAMIRATMAJ MISHRA
Image caption விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 3.5 லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கடுமையான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
படத்தின் காப்புரிமை SAMIRATMAJ MISHRA
Image caption ரயில் பெட்டிகள் தடம்புரண்ட சம்பவத்தை கேள்விப்பட்டு மிகவும் வேதனை அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்