திருமணங்கள் அனைத்தையும் 'லவ் ஜிஹாத்' என்று சொல்லலாமா?

  • 22 ஆகஸ்ட் 2017
காதல் ஜிஹாத் படத்தின் காப்புரிமை AFP/Getty Images

கேரளாவைச் சேர்ந்த ஷஃபீக் ஜஹானுக்கும், ஹதியா என்னும் அகிலாவுக்கும் நடந்த திருமணம் 'லவ் ஜிஹாதா?' என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். முஸ்லிம் பெண்ணுக்கும், இந்து ஆண் என்ற தம்பதியை பார்க்கக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

அதில் மனைவி, தனது இந்து கணவனை காதல் வலையில் சிக்கவைத்து அவரை மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறாரா என்பதை பார்க்கவேண்டும். அப்போதுதான் இந்த காதல், லவ் ஜிஹாதா அல்லது வழக்கமான கணவன் மனைவி மோதலா என்று தெரியும்.

'ஜிஹாத்' என்ற அரபு வார்த்தையின் பொருள், மோதல் அல்லது போர். மோதலோ, போரோ, தீயதை வெல்ல நன்மை முயல்கிறது. இதன்படி பார்த்தால், இந்து-முஸ்லிம் மோதல்களைத் தவிர ஒவ்வொரு திருமணமுமே லவ் ஜிஹாத் தானே?

முதலில் காதல் திருமணம் செய்துக் கொள்கின்றனர். பிறகு தம்பதிகளிடையே 'ஜிகாத்' தொடங்குகிறது. உணவு பழக்கம், உறவுகள், குழந்தைகள், எதிர்காலம், ஒருவர் மீது மற்றவருக்கு அவநம்பிக்கை என பட்டியல் நீள்கிறது.

'ஒரு திருமணம், காதலில் தொடங்கி, போரில் முடிகிறது' என்று சொன்னால் சரியாக இருக்குமா? வாழ்க்கையில் 'சரி மற்றும் தவறு' என்றே சண்டைகள் தொடர்கின்றன. ஆனால், போரின் இடையே குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என்ன?

படத்தின் காப்புரிமை Reuters

லவ் ஜிஹாத்' வரலாறு

காதல் போர் என்பது இன்று நேற்றா தொடங்கியது? தாத்தா பாட்டி சொல்லும் கதைகளில் இருந்தே தெரிந்துக் கொள்ளத் தொடங்குகிறோம்.

ஒரு ராஜா, மற்றொரு நாட்டின் ராஜகுமாரி அழகானவர் என்று கேள்விப்பட்டு திருமணம் செய்து கொள்ள பெண் கேட்க, தங்களைவிட சாதியில் குறைந்தவர் என்பதால் திருமணத்திற்கு மறுக்கிறார் அண்டை நாட்டு ராஜா. வெகுண்டுபோன பெண் கேட்டவர், போர் தொடுத்து வென்று, இளவரசியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துக்கொள்கிறார்.

அதேபோல், தனது ராஜ்ஜியத்தில் வன்முறைத் தீ பரவாமல் தடுப்பதற்காக, ஜோதா பாய்க்கும், சக்ரவர்த்தி அக்பருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்துவோ, சிந்துவோ பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்தால் அதை லவ் ஜிஹாத் என்றே சொல்லலாம். இதை முடிவு செய்துவிட்டால், பிறகு சட்டப்படியே இந்த பிரச்சனையை கையாளலாம். இந்த பிரச்சனை இப்போதும் தொடர்கிறதா?

படத்தின் காப்புரிமை AFP

காதலோ அல்லது கட்டாயமோ, திருமணம் என்றாலே மோதல், அதாவது ஜிகாத் என்றே சொல்ல்லாம். முதலில் சிறிய புள்ளியாக தொடங்கும் காதல், திருமணம் என்ற கோட்டை போட்ட பிறகு, குழந்தைகள், சூழ்நிலைகள் என கோலமாக மாறுகிறது.

கோலம், அழகானதாக மனதிற்கு அமைதியை தருவதாக இருந்தால் அது வண்ணக்கோலமாக இருக்கும், இல்லாவிட்டால், அது அலங்கோலமாகிவிடும்.

ற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்