முத்தலாக்: ஒரு பார்வை
இந்தியாவின் மிகப்பெரிய மத சிறுபான்மையினராக உள்ள 15.5 கோடி இஸ்லாமியர்களின், திருமணம் மற்றும் விவாகரத்து ஆகியவை, ஷரியா சட்டத்தை அடிப்டையாகக் கொண்ட, இஸ்லாமியர் தனிநபர் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக முத்தலாக் நடைமுறை இந்தியாவில் வழக்கில் இருந்தாலும், அது இஸ்லாமிய நடைமுறைகளுடன் ஒத்துப்போவதில்லை. முத்தலாக் பற்றி ஷரியா சட்டத்திலோ, குரானிலோ குறிப்பிடப்படவில்லை.
மண முறிவுக்கான நடைமுறைகளை குரான் தெளிவாக விளக்குவதாக இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே, கணவன் தன் மனைவிக்கு தலாக் கூற முடியும். தம்பதிகளுக்கு மனமாற்றம் மற்றும் சமாதானத்திற்கான கால இடைவெளியாக அந்த மூன்று மாதங்கள் இருக்கும்.
தீவிர இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில், இடைவெளியின்றி, ஒரே கட்டமாக மூன்று முறை 'தலாக்' வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அந்தத் தடை இருக்கவில்லை.
சில நேர்மையற்ற ஆண்கள், தங்கள் மனைவிகளை மணமுறிவு செய்ய நவீனத் தொழில்நுட்பமும் உதவியது. குறுஞ்செய்திகள், அஞ்சல், தொலைபேசி அழைப்புகள் ஆகியவை மணமுறிவுக்காக அவர்களால் பயன்படுத்தப்பட்டன.
ஸ்கைப், வாட்சப், ஃபாஸ்புக் ஆகியவையும் முத்தலாக் வழங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்கலாம்:
- ஆப்கனில் உள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெற முடியாது: டிரம்ப் உறுதி
- முஸ்லிம் நாடுகளில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள முத்தலாக்
- சிவனின் அர்த்தநாரீஸ்வரர் ரூபம் பாகிஸ்தானில் விரும்பப்படுகிறதா?
- எடப்பாடி மீது நம்பிக்கையில்லை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுனரிடம் கடிதம்
- கழிப்பறை கட்டித்தராத கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண்
- கிரிக்கெட்: இந்தியாவின் அபார வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்
- 72 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர் கப்பல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்