"அந்தரங்க உரிமை" தீர்ப்புக்கு ராகுல் முதல் கமல் வரை வரவேற்பு

GETTY IMAGES படத்தின் காப்புரிமை Getty Images

"அந்தரங்கத்துக்கான உரிமை" அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் அங்கமே என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதை வரவேற்றும் வியப்பு தெரிவித்தும் அரசியல் பிரபலங்கள் மற்றும் சமூக பயன்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் கமல் ஹாசன் இந்த தீர்ப்பு குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில், "இந்த தீர்ப்பில் எதுவும் தெளிவற்றோ உறுதியற்றோ கிடையாது. மாண்புமிகு நீதிபதிகளுக்கு மக்கள் நன்றி கூறுகின்றனர். இவைதான் இந்தியாவை கட்டியெழுப்புவதற்கான தருணங்கள்" என்று கூறியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்த வெற்றி. பாசிஸ சக்திகளுக்கு கிடைத்த அடி" என்று கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில், "தனி நபர் சுதந்திரத்தின் அங்கம் அந்தரங்க உரிமை. அரசியலமைப்பின் 21-ஆவது விதி புதிய மேன்மையை அடைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

திரைப்பட விமர்சனம்: விவேகம்

ஆதார் பதிவு முறையை, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தவறாக பயன்படுத்துவதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வரவேற்று தமது பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதே சமயம், சமூக பயன்பாட்டாளரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண், "தீர்ப்பை வரவேற்கும் அதே சமயம், அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளுக்கு அது உட்படுவதால் அதையும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்" என கூறியுள்ளார்.

ஆதார் முறையை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கு தொடர்ந்துள்ளவர்களில் ஒருவர் என்ற முறையில் பிரசாந்த் பூஷண் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் முக்கிய மனுதாரர்களில் ஒருவரான ஆர்.சந்திரசேகர், "தங்களைப் பற்றிய தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் சட்டப்பூர்வ உரிமையை தனது தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது" என்று கூறினார்.

இந்த தீர்ப்பு ஆதார் பதிவு முறையில் சில விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும் என்று மனுதாரர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராகுல் நாராயணன், எஸ்.பிரசன்னா ஆகியோர் தெரிவித்தனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்