"அந்தரங்க உரிமை" தீர்ப்பு முற்போக்கானது: என்.ராம்

getty images

அந்தரங்க உரிமையை அரசியலமைப்பின் அடிப்படை உரிமை என உறுதிப்படுத்தி முற்போக்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "இத்தீர்ப்பை மிகச் சிறந்த முற்போக்கான தீர்ப்பாக பார்க்கிறேன். அடிப்படை உரிமை என்ன என்பதை மிகவும் தீவிரமாக இத்தீர்ப்பு விளக்கியுள்ளது" என்றார்.

"இந்திய அரசியலமைப்பின் 21-ஆவது விதியை மிகவும் ஆழமாக நீதிமன்றம் விளக்கியுள்ளது என்றும், ஏற்கனவே இரு வேறு வழக்குகளில் தனி நபர் அந்தரங்கத்தை அடிப்படை உரிமை பாதுகாக்காது எனக் குறிப்பிட்ட தீர்ப்புகளைத் திருத்தி அந்த உரிமையை தற்போது உச்ச நீதிமன்றம் பாதுகாத்துள்ளது" என்று என்.ராம் கூறினார்.

"ஆதார் பதிவு விவகாரத்தில் இந்த தீர்ப்பு நிச்சயமாக பிரதிபலிக்கும் என்று கூறும் அவர், ஆதார் முறையைத் திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசின் எண்ணம் இனி கடினமாக இருக்கும்" என்றார்.

"நெருக்கடி காலத்தில் நீதிபதி எச்.ஆர். கன்னா அளித்த தீர்ப்பு ஏற்படுத்திய மாற்றத்தைப் போல இந்தத் தீர்ப்பும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று சிலர் கருதுவதாகவும், மொத்தத்தில் இது ஒரு முக்கியத்துவம் நிறைந்த தீர்ப்பாகும்" என்றும் என்.ராம் தெரிவித்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :