இலங்கையில் 15 சதவீத தம்பதிகளுக்கு மலட்டுத் தன்மை

விந்தணுக்கள் அண்டத்தை நோக்கிச் செல்லுதல். படத்தின் காப்புரிமை Science Photo Library

இலங்கையில் திருமணமான தம்பதிகளில் 15 சதவீதத்துக்கும் அதிகமானோர் குழந்தை பேறு இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறுகின்றது.

தகவல்களின் அடிப்படையில் இதனை அறிய முடிந்துள்ளதாகவும் இது தொடர்பாக விழிப்புணர்வு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அடுத்த மாதம் 26ம் தேதி தேசிய திட்டமிடல் தினம் கடைபிடிக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு அந்த நாளை குழந்தை பேறின்மை பிரச்சினையை முன்னிறுத்திக் கடைபிடிக்க அமைச்சு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன முன் வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்