தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பிய துணை ராணுவ வீரர்

டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாக அதன் நேரலையை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை காவலர் ஒருவர் ஒளிபரப்பினார்.
மேலும், ஜந்தர் மந்தர் பகுதியில் படை வீரர்களின் ஓய்வூதியம், வீரர்களின் பணிப்பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மேடையிலும் தமிழக விவசாயிகளை அந்த காவலர் ஏற்றினார்.
டெல்லியில் கடந்த 41 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் தங்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் போதிய ஆதரவு கிடைக்காத நிலையில் மத்திய துணை ராணுவப்படை வீரரின் செயல்பாடு, ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தது என்று விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
- யார் இந்த அய்யாக்கண்ணு?
- வார்த்தை தவறுகிறார் முதல்வர்: அய்யாக்கண்ணு புகார்
- டெல்லி: தடுப்புக் காவலில் அய்யாக்கண்ணு!
படையின் முழுமையான அலுவல் சீரூடையில் இருந்த முகம்மது ஜலீல் என்ற அந்த காவலர் பிபிசி தமிழிடம் கூறுகையில் "தெலங்கானா மாநிலத்தில் உள்ள மத்திய தொழிலக காவல் படை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறேன்" என்றார்.
"பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எனது நண்பர்களான முன்னாள் படை வீரர்கள் சங்கத்தினர் ஜந்தர் மந்தரில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக டெல்லி வந்தேன்" என்றார் அவர்.
மேலும் அவர், "ஜந்தர் மந்தரில் முன்னாள் படை வீரர்களை போலவே, விவசாயிகளும் போராடி வருவதைக் கண்டு கவலை அடைந்தேன். நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். அதனால் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் விவசாயிகளின் நிலையை விளக்க அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன்" என்றார்.
- பிரபல சாமியார் "குற்றவாளி" என தீர்ப்பு: ஹரியானா, டெல்லி வன்முறையில் 23 பேர் பலி
- பாலியல் வழக்கு: ஹரியானா சாமியார் பிரபலமானது எப்படி?
- பாலியல் வழக்கில் ஹரியானா சாமியார் "குற்றவாளி" என நீதிமன்றம் தீர்ப்பு
மத்திய துணை ராணுவப் பணியில் இருந்து கொண்டு, வெளிப்படையாக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதால் பிரச்சனை ஏற்படாதா என்று கேட்டதற்கு, "விவசாயிகள் நியாயமான கோரிக்கைக்காக போராடுகின்றனர். அவர்களின் கோரிக்கையை நாட்டின் துணை ராணுவப் படை வீரர் என்ற முறையில் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லவே அவர்களின் போராட்டத்தை நேரலையாக ஒளிபரப்பினேன்" என்றார்.
"விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நானும் அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்" என்றார் காவலர் ஜலீல்.
பிற செய்திகள்:'
- தமிழக கல்வித் துறையில் உதயசந்திரனின் பொறுப்புகள் குறைப்பு
- தாய்லாந்தை விட்டு தப்பினார் முன்னாள் பிரதமர் இங்லக் சின்னவாட்
- இந்தப் பாறைகள் அந்தரத்தில் மிதக்கின்றனவா?
- சீன ராணுவத்துக்கு தகுதி பெற 10 அறிவுரைகள்
- சோதிக்காத ஏவுகணை திட்ட விவரங்களை கசிய விட்டது வடகொரியா
- கொலைகாரர் யார் ? புதிரை கண்டுபிடியுங்கள்!
- திரைப்பட விமர்சனம்: விவேகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :