ஹரியானா சாமியாருக்கு தண்டனை இன்று அறிவிப்பு: 7 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  • 28 ஆகஸ்ட் 2017
ஹரியானா சாமியாருக்கான தண்டனை நாளை அறிவிப்பு: அரசு எடுத்துள்ள 7 முன்னெச்சரிக்கைகள் படத்தின் காப்புரிமை Getty Images

பாலியல் வல்லுறவு வழக்கில் "தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ. நீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது.

தீர்ப்பு வழங்கப்பட்ட அன்று, ஹரியானாவின் பல்வேறு இடங்களில் குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட வன்முறைகளில் பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மீண்டும் வன்முறை நிகழாமல் தடுக்க ஹரியானா அரசு, கீழ்கண்ட 7 முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.

  • பிற்பகல் 2.30 மணிக்குத் தண்டனை விவரங்கள்

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங், சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கான தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளார். எந்த சூழ்நிலையினையும் சமாளிக்க ராணுவம் தயாராக இருப்பதாக ஹரியானா டிஜிபி சாந்து கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
  • மொபைல் இண்டநெட்டிற்கு தடை

ஹரியானா உள்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 29-ம் தேதி காலை 11.30 வரையில் வரை மொபைல் இண்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைக்கு தடை விதித்துள்ளது

  • கடும் நடவடிக்கை

ஏதேனும் பிரச்சனை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஹரியானா போலீஸ் தெரிவித்துள்ளது. 23 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • தேரா சச்சா செளதா அமைப்பினர் மீது வழக்கு

வன்முறையை தூண்டியதாக, தேரா சச்சா செளதா அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஆதித்தியா இன்சான், ஊடக ஆலோசகர் திமான் இன்சான் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
  • காலியான தேரா மையங்கள்

ஹரியானா மாநிலம் முழுவதும் அமைந்துள்ள 131 தேராவின் கூடுகை மையங்களில், 103 மையங்களில் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். சிர்சாவில் உள்ள தலைமையிடத்தை தவிர மற்ற மையங்களில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதாக ஹரியானா டிஜிபி கூறியுள்ளார்.

  • 38 பேர் கொல்லப்பட்டனர்

குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
  • பள்ளிகளுக்கு விடுமுறை

ஹரியானா முதல் டெல்லி என்சிஆர் வரையிலான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்