குர்மித் ராம் ரஹீமின் உலக சாதனைகள்: கை கழுவுவது - வாழ்த்து அட்டை வரை

சிர்ஸாவில் மிகப்பெரிய பதாகையை உருவாக்கி உலக சாதனை படத்தின் காப்புரிமை GUINNESS WORLD RECORDS
Image caption சிர்ஸாவில் மிகப்பெரிய பதாகையை உருவாக்கி உலக சாதனை

பாலியல் வல்லுறவு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் பெயர் பல சாதனை புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது.

அவர் நடித்த திரைப்பட சுவரொட்டிகள் முதல் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் வரை அடங்கும். அவரது சாதனைகளில் சில:

1. மிகப்பெரிய விரல் ஓவியம்

மிகப்பெரிய விரல் ஓவியத்தை உருவாக்கியது குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் 'ஷா சத்னாம்ஜி க்ரீன் எஸ் வெல்ஃபர் போர்ஸ்' என்று உலக கின்னஸ் சாதனை புத்தகம் கூறுகிறது.

2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் நாளன்று சிர்ஸாவில் 3900 சதுர மீட்டரில் (41979 சதுர அடி) இந்த ஓவியம் உருவாக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை GUINNESS WORLD RECORDS

2. மிகப்பெரிய திரைப்பட சுவரொட்டி

உலகின் மிகப்பெரிய திரைப்பட சுவரொட்டியை உருவாக்கியது குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் ஹகீகத் இண்டர்னெட் பிரைவெட் லிமிடெட் என்று கின்னஸ் உலகச் சாதனை புத்தகம் கூறுகிறது. 15123.8 சதுர மீட்டரில் (162791.2 சதுர அடி) இந்த சுவரொட்டி ஹரியானாவில் 2016 அக்டோபர் 14ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது.

இந்த சுவரொட்டி குர்மீத் ராம் ரஹீம் சிங் திரைப்படமான 'எம்.எஸ்.ஜி: த வாரியர் லையன்' என்ற திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட விளம்பர சுவரொட்டி அது.

மிகப்பெரிய சுவரொட்டி செய்திருந்த தனது சாதனையை தானே முறியடித்தார் ராம் ரஹீம். 5969.61 சதுர மீட்டர் (64256.34 சதுர அடி) கொண்ட இந்த சுவரொட்டி 2015ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதியன்று ஷா சத்னாம் கிரிகெட் மைதானத்தில் உருவாக்கப்பட்டது.

இந்த சுவரொட்டி குர்மீத் ராம் ரஹீமின் எம்.எஸ்.ஜி-2 திரைப்பட விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்டது. 55,598.21 சதுர அடியில் உருவாக்கப்பட்டிருந்த பாகுபலி திரைப்பட சுவரொட்டியின் சாதனையை இது முறியடித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

3. ஒரே நேரத்தில் கை கழுவும் சாதனை

சிர்ஸாவில் இருக்கும் தேரா சச்சா அமைப்பின் எஸ்.எம்.ஜி வளாகத்தில், குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் 'ஷா சத்னாம் க்ரீன் எஸ் வெல்ஃபர் ஃபோர்ஸ் குழுவினர்' 2012 செப்டம்பர் 23ஆம் தேதியன்று இந்த சாதனையை நிகழ்த்தினர்.

பல்வேறு நகரங்களில் தூய்மைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 7,675 பேர் ஒரே நேரத்தில் கைகளை கழுவி சுத்தப்படுத்தும் நிகழ்வு உலக சாதனையாக செய்யப்பட்டது.

படத்தின் காப்புரிமை GUINNESS WORLD RECORDS

4. காய்கறிகளை பயன்படுத்தி பிரம்மாண்ட '1' தயாரிக்கப்பட்டது

ஆர்கானிக் காய்கறிகளை பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் 1858.07 சதுர மீட்டர் (20000 சதுர அடி) '1' என்ற சின்னம் உருவாக்கப்பட்டது.

குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் ஷா சத்னாம் க்ரீன் எஸ் வெல்ஃபர் ஃபோர்ஸ் குழுவினர் ஷா சத்னாம் கிரிக்கெட் மைதானத்தில் உருவாக்கப்பட்டது.

பூசணிக்காய், குடைமிளகாய், பட்டாணி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் தக்காளி என 77,723 கிலோ காய்கறிகளை பயன்படுத்தி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

படத்தின் காப்புரிமை GUINNESS WORLD RECORDS

5. பிரம்மாண்ட வாழ்த்து அட்டை

குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் ஹகீகத் இண்டர்னெட் பிரைவெட் லிமிடெட் இணைந்து 398.42 சதுர மீட்டர் (4289.06 சதுர அடி) பிரம்மாண்ட வாழ்த்து அட்டையை உருவாக்கியதாக கின்னஸ் உலகச் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

6. மிகப்பெரிய எண்ணெய் விளக்கு

அதிக அளவிலான எண்ணெய் தீபங்களை வைத்து உலக சாதனையையும் செய்திருக்கிறார் குர்மீத் ராம் ரஹீம் செய்தார். ஹரியானா மாநிலம் 2016 செப்டம்பர் 23-ஆம் தேதியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,50,009 விளக்குகள் ஏற்றப்பட்டன.

இந்த சாதனையில் 1531 பேர் பங்கேற்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

7. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீடியோ

பிறந்தநாளன்று வீடியோ மூலமாக அதிக அளவு வாழ்த்துகளை பெற்றார் குர்மீத் ராம் ரஹீம் சிங். 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதியன்று 32,207 வீடியோ மூலம் வாழ்த்துக் களை பெற்றவர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் குர்மீத் ராம் ரஹீம் சிங் இடம் பெற்றுள்ளார்.

இந்த வீடியோ 2016 ஆகஸ்ட் 14 முதல் நவம்பர் 14 வரை ராம் ரஹீமுக்கு அனுப்பப்பட்டது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உலகம் முழுவதும் கடலில் பயணிக்கவுள்ள பெண்கள் குழு

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்