ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எய்ம்சில் நடக்கும் ஒட்டிப் பிறந்த குழந்தைகளைப் பிரிக்கும் அறுவை சிகிச்சை (காணொளி)

இந்தியாவின் கிழக்குப்பகுதியில் இருக்கும் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த, தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்க, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிக்கலான அறுவை சிகிச்சையின் முதல்கட்டம் வெற்றிகரமாக நடந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மூளையிலிருந்து இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் நரம்பை இந்த இரு குழந்தைகளும் பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்தியாவில் இத்தகைய அறுவை சிகிச்சை நடப்பது இதுவே முதல்முறை. இந்த இரட்டையர்கள் அக்டோபர் மாதத்திற்குள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுவிடுவார்கள் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான காணொளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்