'பர்ன் மீ அலைவ்': மோதியை பகடி செய்யும் ட்விட்டர்வாசிகள்

  • 1 செப்டம்பர் 2017

கடந்த ஆண்டு 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களின் செல்லாது என்று அறிவித்தபோது, 50 நாட்களுக்குள் நிலைமை சீரடையாவிட்டால் என்னை 'உயிருடன் வைத்துக் கொளுத்துங்கள்.' என்று கூறியிருந்தார் பிரதமர் நரேந்திர மோதி.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரதமர் நரேந்திர மோதி

தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள், செல்லாததாக அறிவிக்கப்பட்ட 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தில் 15.28 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே, அரசு கூறியபடி கறுப்புப் பணம் இன்னும் ஒழியவில்லை என்றும், மக்கள் இன்னலுக்கு ஆளானதுதான் மிச்சம் என்றும், பிரதமர் நரேந்திர மோதியை விமர்சனம் செய்பவர்கள், சமூக வலைத்தளங்களில் #burnmealive என்னும் ஹேஷ்டேக் உடன் பதிவிடுகின்றனர்.

பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம்

பிரபலம் அடைந்த இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி பல சமூக வலைதளப் பயன்பாட்டாளர்களும் கேளிக்கை கலந்த கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

மோதி, இது நீங்கள் உங்கள் வார்தையைக் காப்பாற்ற வேண்டிய தருணம் என்று கூறியுள்ளார் நவநீத கிருஷ்ணன்.

முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவுகளைப் பார்த்தபின்பு, 'என்னை உயிருடன் கொளுத்துங்கள்' என்று மோதி கூறியதாக கிருபாநந்தன் பதிவிட்டுள்ளார்.

பண மதிப்பு நீக்கம் இந்தியாவின் 'புளூ வேல்' விளையாட்டு என்றும், கருப்பு பணத்தைத் தவிர எல்லா நிறமுள்ள பணமும் வெளிவந்துள்ளது என்று கூறியுள்ளார் சத்திய மூர்த்தி.

மோதியின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த பிரபலங்களும் இந்தப் பகடிகளில் இருந்து தப்பவில்லை.

மன்மோகன் சிங் அவர்களின் திட்டங்களை திருடலாம்.அதனை செயல்படுத்த போதுமான அறிவு தேவை. ஆட்சியாளர்களுக்கு அடிப்படை அறிவே கேள்விக்குறிதானே, என்று பதிவிட்டுள்ளார் ரஜினி ரசிகன் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் ஒரு பயன்பாட்டாளர்.

சுத்தமா இருக்கும் ரோட்ல குப்பைய போட்டு சுத்தப்படுத்தறது தான் ஸ்வட்ச் பாரத்தான்னு கேட்டா 'பர்ன் மீ அலைவ்' என்கிறது இந்த ட்வீட்

மோதியை விமர்சிக்க மட்டுமல்லாமல், வேறு சில நகைச்சுவையான, கவித்துவமான வகையிலும் இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தப்படுகிறது.

உன் காதலால் என்னை எரித்துவிடு!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்