முதல் ஆண்டை முடித்துள்ள ஜியோ: சந்தை நிலவரம் என்ன?

கடந்த ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ, சந்தையில் ஏற்படுத்திய மாபெரும் தாக்கத்தின் முன், இந்தியாவின் மிகப்பெரிய செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களான வொடாஃபோனும், ஏர்டெல்லும் போட்டி போட முடியாமல் திணறுகின்றன.

படத்தின் காப்புரிமை AFP

ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டில், 'டேட்டா' பற்றிய இந்திய மொபைல் ஃபோன் வாடிக்கையாளர்களின் கண்ணோட்டம் முற்றிலும் மாறிவிட்டது.

வாடிக்கையாளருக்கு 11 ரூபாயில் சேவை

முதலில் டேட்டாவிற்கான கட்டணம் பற்றி பார்ப்போம். ஜியோ சந்தைக்கு வருவதற்கு முன்பு எல்லா நிறுவனங்களும் ஒரு ஜி.பி டேட்டவிற்கு ஏறத்தாழ 250 ரூபாய் கட்டணம் வசூலித்துவந்தன.

மாதம் 309 ரூபாய் கட்டணத்தில் தினந்தோறும் ஒரு ஜி.பி டேட்டா என்ற திட்டத்தை ஜியோ வழங்கியது. பிற நிறுவனங்களின் திட்டங்களில் கட்டணம் 28 நாட்களுக்கு மட்டுமானது.

கிட்டத்தட்ட 11 ரூபாய் செலவில் தினமும் ஒரு ஜி.பி டேட்டா என்பதால் தேவையான அளவு டேட்டாவை பயன்படுத்தும் சுதந்திரம் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்தது.

படத்தின் காப்புரிமை AFP

ஜியோவின் இரண்டாவது யுக்தி

புதிய வாடிக்கையாளர்களை இணைக்கும் நோக்கில் மலிவு விலை கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகிறது ஜியோ. விலை குறைவாக இருந்தால் கைப்பேசிகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அந்த கைப்பேசிகளில் டேட்டாவையும் பயன்படுத்தலாம். அதில் 'வாட்சப்' போன்ற செயலிகளுக்குப் பதிலாக, ஜியோவின் மெசெஞ்சரை பயன்படுத்த ஊக்கவிக்கப்படலாம்.

கைப்பேசியை பயன்படுத்தும் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணம் கட்டிவிட்டு செல்பேசி சேவையைப் பயன்படுத்தும் 'ப்ரீபெய்ட்' கட்டண முறையையே தேர்ந்தெடுத்துள்ளார்கள். எனவே அதற்கேற்ற திட்டங்களையே நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன. 'ப்ரீபெய்ட்' வாடிக்கையாளர்களில் பலர் கைப்பேசி எண்களை அடிக்கடி மாற்றுவதற்கு தயக்கம் காட்டாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை AFP

கைப்பேசிக்குள் அடங்கும் வங்கிச் சேவை

கடந்த 2-3 ஆண்டுகளாக வங்கிச் சேவைகள் கைப்பேசிக்குள் வந்துவிட்டன. ரிலையன்ஸ் நிறுவனம் 'பேமெண்ட் பேங்க்' எனப்படும் மின்னணுப் பணப் பரிவர்த்தனைக்கான உரிமத்தை வாங்கிவிட்டதால், 'ஜியோ மணி' சேவையைப் பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“உங்கள் செல்பேசியிலும் தொலைக்காட்சியிலும் சிஐஏ”: விக்கிலீக்ஸ்

இந்த மலிவு விலை செல்பேசிகளில் 'ஏர்டெல் மணி' அல்லது 'டிஜிட்டல் பேங்க்' போன்றவற்றை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.

மலிவு விலையில் செல்பேசியைக் கொடுத்து, மாதம் 100 ரூபாய் கட்டணத்தில் எத்தனை அழைப்புகளை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற திட்டம் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லமுடியுமா?

படத்தின் காப்புரிமை TWITTER

ஜியோவின் மூன்றாவது யுக்தி என்ன?

ஜியோ தனது மூன்றாவது வியாபார யுக்தியை விரைவில் களமிறக்கும். அகண்ட அலைவரிசை (Broadband service) சேவையை விரைவில் சந்தைப்படுத்தவிருக்கிறது ரிலையன்ஸ். வீடுகளுக்கு இந்த சேவையை வழங்குவதற்காக ஃபைபர் கேபிள்களை பதிக்கும் பணி பல நகரங்களில் முடிந்துவிட்டது.

மிகவும் குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சேவையை கொடுத்து ஏர்டெல்லின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர ஜியோ திட்டமிடுகிறது.

தற்போது சந்தையில் நிலவும் கட்டணத்தைவிடக் குறைவாகக் கொடுத்தால், வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டாலும், தற்போதைய வேகத்தை விட அதிவேக அகன்ற அலைவரிசை சேவையை கொடுத்தால், சந்தையில் தாக்குபிடிக்க பிற நிறுவனங்களும் கட்டணத்தை குறைக்க வேண்டியிருக்கும்.

அடுத்த சில மாதங்களில், 'பிராட்பேண்ட்' எனப்படும் அகண்ட அலைவரிசை சேவை, சந்தையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சாதகமானதாக மாறிவிடும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜியோவுக்கு வருமானம் எப்படி கிடைக்கும்?

கட்டணத்தையும், விலையையும் குறைவாக நிர்ணயித்தால் லாபம் கிடைக்காதே?

2008-ஆம் ஆண்டில் உரிமம் பெற்ற பல நிறுவனங்கள் இந்தக் கொள்கையைக் கடைபிடித்தன. ஆனால் அவற்றில் சில இன்று சந்தையில் இருந்தே வெளியேறிவிட்டன. சில நிறுவனங்களின் உரிமத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 13-இல் இருந்து ஆறாகக் குறைந்துவிட்டது. சந்தையில் தற்போது பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் ஆகிய இரண்டு அரசு நிறுவனங்களைத் தவிர ஏர்டெல், ஏர்செல், ஐடியா, ரிலயன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வொடாஃபோன், ஜியோ அகிய ஆறு நிறுவனங்கள் மட்டுமே செல்பேசி சேவையை வழங்குகின்றன.

இதில் இரண்டு நிறுவனங்களின் நிலை மந்தமாக இருக்கிறது. வொடாஃபோனும், ஐடியாவும் இணைந்து செயல்படுகின்றன.

செல்பேசி, இணையதளம் என மக்கள் இணைந்த உலகை நோக்கி பயணிப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் அதேவேளையில், இதற்கான சேவை வழங்கும் நிறுவனங்கள் ஈட்டும் லாபம் குறைகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :