1993 தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்: மும்பைக்கு என்ன நடந்தது?

மும்பை வெடிகுண்டுத் தாக்குதல் படத்தின் காப்புரிமை Getty Images

சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த மும்பை தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கில் இருவருக்கு வியாழக்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட வழக்கு விசாரணையில் 100 பேர் தண்டனை பெற்றனர்.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு என்பது பெரிய கால இடைவெளி. அந்த மோசமான நாளில் மும்பையில் என்ன நடந்தது?

1993, மார்ச் 12. வெள்ளிக்கிழமை. அப்போது பாம்பே என்று அழைக்கப்பட்ட மும்பையின் மிடுக்கெல்லாம் சுமார் 2 மணி நேரத்தில் தவிடு பொடியானது.

பகல் 1.30ல் இருந்து 3.40 வரை அடுத்தடுத்து மும்பையின் பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் அந்த நகரத்தை நிலைகுலைய வைத்தன.

13 இடங்களில் தாக்குதல்

மொத்தம் 13 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. மும்பை பங்குச் சந்தை, ஏர் இந்தியா அலுவலகம், சீ ராக் ஹோட்டல், பாலிவுட் பிரபலம் சாந்தாராமின் பிளாசா சினிமா போன்ற நகரின் புகழ்பெற்ற கட்டடங்கள் தரைமட்டமாயின.

1992 டிசம்பர், 1993 ஜனவரி மாதங்களில் நடந்த மும்பை கலவரங்களில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

அதற்குப் பழிவாங்கும் வகையிலும், 1992 டிசம்பரில் நடந்த அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்குப் பதிலடியாகவும் இந்த வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, இயல்பாகவே, வலதுசாரி இந்து கட்சியான சிவசேனையின் தலைமையகம் தாக்குதலுக்கு இலக்கானது.

வணிகமே கடவுள்

வணிகமே பாரம்பரியமாக மும்பையின் கடவுள். வகுப்புவாதமும் வணிகமும் எதிர்ப்பதங்கள். மும்பையில் இந்துக்களின் வணிகங்கள் முஸ்லிம் தொழிலாளர்கள் இல்லாமலும், முஸ்லிம் சப்ளையர்கள் இல்லாமலும் பிழைத்திருக்க முடியாது என்பதாலும், துணிச்சலாக செயல்பட்ட அமைதிக் குழுக்களாலும் வன்முறைத் தீ தணிந்தது.

கலவரத்தில் 257 இறந்தனர். 1,400 பேர் காயமடைந்தனர். இது மும்பையின் உளவியல் மீது மிகப் பெரிய தாக்குதலாக அமைந்தது.

இந்திய மாநகரம் ஒன்று பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானது இதுவே முதல் முறை. அதன் பிறகு பலமுறை மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களைப் பார்த்துவிட்டது.

தாதாவான கான்ஸ்டபிள் மகன்

ஒரு கான்ஸ்டபிளின் மகனாகப் பிறந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் ஆகியோர் இத் தொடர் வெடிகுண்டுத் தாக்குதலை திட்டமிட்டவர்கள் என்று பரவலாகப் பார்க்கப்பட்டது.

ஆனால், தம் சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவதாக இதிகாசக் கதையில் வரும் பீனிக்ஸ் பறவை போல மும்பையின் உணர்வும், ஊக்கமும் மீண்டும் உயிர்த்தெழுந்தது.

காயமடைந்தவர்களை சாமானிய மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தாக்குதல் நடந்த நாளில், ரத்த வங்கிகளில் ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர். மறுநாள் பெரும்பாலானோர் தத்தமது அலுவலகங்களுக்குச் சென்றனர்.

ஆனால், அரசாங்கமும், நகர நிர்வாகமும் செய்யவேண்டிய வேலையை மக்களின் தலையில் கட்டுவதாகவும் இது பார்க்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்