தமிழக முகாமில் வசிக்கும் ரோஹிஞ்சா அகதிகள் (காணொளி)

தமிழக முகாமில் வசிக்கும் ரோஹிஞ்சா அகதிகள் (காணொளி)

மியான்மரில் ராணுவ நடவடிக்கையால் சிறுபான்மை ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

அகதிகளான ரோஹிஞ்சா மக்கள் வங்கதேசம், இலங்கை, அமெரிக்கா என பலநாடுகளுக்கும் தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில், கடந்த 2014-ல் தமிழகத்திற்கு வந்த ஒரு சிறு தொகுதி ரோஹிஞ்சா அகதிகள், சென்னை கேளம்பாக்கம் பகுதியில் ஒரு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

47 குழந்தைகள் உட்பட 94 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இங்கு அடிப்படைத் தேவைகளுடன் நலமுடன் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

ஆனால், இந்திய அமைச்சர் ஒருவர் இந்த அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்த கருத்து பற்றி இவர்கள் அறிந்திருக்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :