இன்ஸ்டாகிராமில் காண கிடைக்கும் இந்தியாவின் ரயில் பயணங்கள்

ரயில் பயணங்களை மிகவும் விரும்புகின்ற ஷான்னு பாபார் ஒவ்வொன்றையும் ஆவணப்படுத்த, பிறரும் அவரோடு சேர்ந்து ஆவணப்படுத்தினர்.

இந்த சுயப்படம் இந்தியாவின் தெற்கு பகுதியிலுள்ள கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள ஒரு ரயில் நிலையம் ஒன்றில் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், Shanu Babar

படக்குறிப்பு,

5 வயது குழந்தையாக இருந்தபோது ஷாயனு பாபார் முதல்முறையாக ரயிலில் பயணம் செய்தார். ரயில் பயணங்களின் மீது நீண்டகாலமாக தொடரும் விருப்பம் அப்போதுதான் தொடங்கியது. கல்லூரியில் படிக்கும்போது, ஆய்வுக் கட்டுரைக்காக தன்னுடைய ரயில் பயணங்களை அவர் ஆவணப்படுத்தினார். இந்த சுயப்படம் இந்தியாவின் தெற்கு பகுதியிலுள்ள கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள ஒரு ரயில் நிலையம் ஒன்றில் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், Shanu Babar

படக்குறிப்பு,

2015 ஆம் ஆண்டு ஜூலை 21: இஸ்டாகிராமில் பாபார் தன்னுடைய பயணங்களை பதிவு செய்ய “@வின்டோசீட்புராஜெக்ட்” என்ற ஹேஸ்டேக்கோடு பதிவிட தொடங்கினார். “சன்னலோர இருக்கை”தான் இத்தகைய ரயில் பயணங்களில் அவர் எப்போதும் அமர விரும்புகிற இடம் என்கிறார். இந்தியாவின் தெற்குப் பகுதியில் வண்ணமயமான ஏர்காடு விரைவு ரயிலில் இந்த புகைப்படத்தை எடுப்பதற்கு சௌகரியமான இடமும் இந்த சன்னலோரம்தான். ஒவ்வொரு ரயில் பெட்டியும் வேறுப்பட்ட வணிக பிராண்டுகளின் விளம்பரங்களை கொண்டிருக்கின்றன.

பட மூலாதாரம், Souvik Koley

படக்குறிப்பு,

2015 ஆம் ஆண்டு, பிற இன்ஸ்டாகிராம் பயனாளர்களும் “@வின்டோசீட்புராஜெக்ட்” ஹேஸ்டேக்கோடு சேர்த்து தங்களுடைய இந்திய ரயில் பயணங்களை வரிசையாக பதிவிடதொடங்கினர். கொல்கத்தாலுள்ள இந்த உள்ளூர் ரயிலில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் உள்பட இந்தப் படங்களை எல்லாம் பாபார் மீண்டும் பதிவிட்டுள்ளார். அதிக பொருட்களின் மத்தியில் களைப்படைந்த தொழிலாளர்கள் குட்டித் தூக்கம் போடுவதை பார்ப்பது மனதை இளக செய்கிறது.

பட மூலாதாரம், Manpreet Singh

படக்குறிப்பு,

பங்களிப்போர் பலரிடம் இருந்து புகைப்படங்கள் வெள்ளம்போல பெருகத் தொடங்கியதால், “@வின்டோசீட்புராஜெக்ட்” அதிக புகைப்படங்களை காணத்தருகின்ற காட்சி நூலகமாகியது. இந்தியாவில் கிராமப்புற பண்ணைகளில் இருந்து நகர்ப்புறப் பண்ணைகளுக்கு பால் விவசாயிகள் பாலை எப்படி பிற இடங்களுக்கு அனுப்புகிறார்கள் என்பது பற்றி இதில் பாபார் காட்டுகிறார். இவ்வளவு கேன்களை வைக்க ரயிலுக்குள் இடமில்லை என்பதால்தான் இவ்வாறு செய்கிறார்கள்

பட மூலாதாரம், Wajahat Mirza

படக்குறிப்பு,

மீண்டும் பதிவிடப்பட்டுள்ள இந்த புகைப்படம், ரயில் பயணங்களில் காண கிடைக்கின்ற தராள இயற்கைக்காட்சிகளை காட்டுவதாக பாபார் தெரிவிக்கிறார். அறியாதவர் சிலர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் அவர்களோடு படுக்கின்ற இடத்தை பகிர வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவர்களுடைய முன்பதிவு, அவர்கள் ரயிலில் ஏறிய பின்னர்தான் உறுதி செய்யப்படும். இந்த புகைப்படத்தில் சட்டை இல்லாமல், குளிரூட்டும் வசதியில்லாத ரயில் பெட்டியில் இருவர் படுத்துள்ளனர்.

பட மூலாதாரம், Shraddha Gosavi

படக்குறிப்பு,

ரயில் பயண வழிகளில் கிடைக்கின்ற பல வகையான உணவு பொருட்கள் இந்திய ரயில் பயணங்களின் ஒரு பாரம்பரியம் என்கிறார் பபார். குழம்புகள், ரொட்டிகள், சோறு மற்றும் மசாலா கலக்கப்பட்ட பாலாடையுடன் கிடைக்கும் மசாலா பூரிகள் என இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள குன்றுகளையொட்டி ஆண்டுதோறும் செல்லுகின்றபோது, குடும்பங்களின் விருந்துகளை இந்த உணவு பொருகள் நினைவூட்டுவதாக அவர் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Harshita Mahajan

படக்குறிப்பு,

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மதிய வேளையில் டெல்லியில் நிஸாமுதீன் ரயில் நிலையத்தில் உள்ளூர் ரயிலில் இந்த மனிதர்களை கடந்து நடந்து சென்றதை நினைவுகூர்கிறார் புகைப்படக்லைஞரான ஹார்ஷிதா மகாஜன். அவர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு பெரியதொரு புகைப்படக் கருவியை அவர் வைத்திருந்தார். “அவர்களுடைய வெளிப்பாடுகளில் இருந்து ஆர்வமும், உற்சாகமும்தான் என்னை மிகவும் தொட்டது” என்று அவர் கூறுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலான பின்னர், இந்த புகைப்படம் “@வின்டோசீட்புராஜெக்ட்”டில் மீண்டும் பதிவிடப்பட்டது.

பட மூலாதாரம், Shanu Babar

படக்குறிப்பு,

“சீட்டு விளையாடுவதைவிட வேறு எதுதான் நம்முடைய அறிமுகமின்மையை நீக்க முடியும்?” என்று வினவுகிறார் பாபார். இந்த விளையாட்டின் மூலம், மனிதர்கள் சிரித்தனர், கூக்குரலிட்டனர், விவாதித்தனர். அவர்கள் தங்களுடைய பெயரையே பரிமாறிக்கொள்ளாத அந்நியர்கள். ஆனால், அவர்கள் நண்பர்களைபோல விளையாடினர் என்று அவர் கூறுகிறார். பாபார் இந்த சீட்டு விளையாட்டில் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு அடுத்ததாக நடைபெற்று கொண்டிருந்த கெரோக்கி அமர்வை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.

பட மூலாதாரம், Prince Mandal

படக்குறிப்பு,

வழக்கமற்றவைகளில் இருந்து தீங்கற்றவைகள் வரை “@வின்டோசீட்புராஜெக்ட்” ஹேஸ்டேக்கில் 26 ஆயிரம் படங்கள் உள்ளன என்று பாபார் தெரிவித்திருக்கிறார். இந்த புகைப்படம் ஹௌரா-ஜமால்பூர் விரைவு ரயில் எடுக்கப்பட்டு பாபாரால் மீண்டும் பதிவிடப்பட்டது. இந்த ரயில் பாதை இந்தியாவின் கிழக்கில் அமைந்துள்ள மேற்கு வங்கத்தை 9 மணிநேரத்தில் செல்ல உதவுகிறது. முதியோரும், ஏழைகளும் ரயில் கால அட்டவணையை வாசிக்க தெரியாதவர்களாக இருப்பதால் பெண் பயணிகள் மிகவும் கவலையோடு தொன்றுவதாக அவர் எண்ணுகிறார்.

பட மூலாதாரம், Divya Duggar

படக்குறிப்பு,

இந்த புகைப்படத்தை எடுத்த திவ்யா துர்கா, நாங்கள் இந்த விலங்கு குட்டிகளோடு முதல் வகுப்பில் பணிக்கிறோம்” என்கிறார். செல்ல விலங்க்களோடு ரயில் பயணம் மேற்கொள்வோர் தங்களுடைய படுக்கையையும், அல்லது கூண்டையும் முதல் வகுப்பிலேயே வைக்க இடம் ஒதுக்க வேண்டும். இதுதான் அவளுடைய நாய், மார்க்கோபோலோ, டெல்லியில் இருந்து இமய மலைக்கு செல்கிறது. அவர் தன்னுடைய செல்ல நாயோடு 4 மறை ரயிலில் பயணித்துள்ளார். மிக நீண்ட தூர பயணம் 30 மணிநேரங்கள். துர்க்காவின் புகைப்படங்கள் ஒரேயொரு முறை “@வின்டோசீட்புராஜெக்ட்” ஹேஸ்டேக்கில் பதிவிடப்பட்டது.

பட மூலாதாரம், Shanu Babar

படக்குறிப்பு,

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்தியாவின் மத்தியில் செல்லும் ஷோபூர் கலன் விரைவு ரயிலின் மேற்கூரையில் ஏறிவிட்டார் பாபார். ரயிலின் உள்ளே இடம் இல்லாததால் பயணிகள் கூரையில் ஏறி அமர்ந்தனர். அவர்கள் செய்தித்தாள் வாசித்தனர். தூங்கினர். குகைப்பகுதியை நெருங்கியபோது, அனைவரும் ஒன்றாக தலையை தாழ்த்தி கொண்டனர் என்று பாபார் நினைவுகூர்கிறார். மக்களின் பழக்கம் மிகவும் விநோதமானவை என்று அவர் தெரிவிக்கிறார்.