பசுக்கள் முதல் விமானம் வரை: அறிவியல் வரலாற்றை 'திருத்தி' எழுதிய இந்திய அமைச்சர்கள்

இந்தியாவின் இளைய கல்வி அமைச்சர், சத்யபால் சிங், பண்டைய இந்திய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பற்றி பொறியியல் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம் என்றும், முதன்முதலில் இந்து இதிகாச புராணமான ராமாயணத்தில்தான் விமானம் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறி புருவங்களை உயர்த்த வைத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை HULTON ARCHIVE/GETTY IMAGES

தலைநகர் டெல்லியில் ஒரு பொறியியல் விருது விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட சத்யபால் சிங், விமானம் ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, ஷிவக்கர் பாபுஜி தல்பேடி என்ற ஒரு இந்தியரால் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறினார்.

ஷிவக்கர் பாபுஜி தல்பேடியின் சாதனைகள் சரிபார்க்கப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் சத்யபால் சிங்கின் கருத்துக்கள் ஏளனம் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், இத்தகைய கூற்றுக்களை கூறும் முதல் இந்திய அமைச்சர் இவர் அல்ல, இவரது கூற்று விஞ்ஞானத்திற்கு பண்டைய இந்தியாவின் பங்களிப்பு அல்லது விமானத்தை கண்டுபிடித்தது என்பது மட்டுமே ஆகும்.

2015 ஆம் ஆண்டு ஒரு மதிப்புமிக்க விஞ்ஞான மாநாட்டில் பேச்சாளர் ஒருவர் தனது பார்வையாளர்களிடம் விமானத்தின் கண்டுபிடிப்பாளர் உண்மையில் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பரத்வாஜா என்ற முனிவர் என்று கூறினார்.

ஓய்வுபெற்ற விமானி மற்றும் விமானி பயிற்சி பள்ளியின் தலைவராக இருந்த கேப்டன் ஆனந்த் போதஸ், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா விண்வெளி விமானங்களையும், இன்றைய முறைகளில் இருந்தும் மேம்பட்ட அதிநவீன ரேடாரையும் கொண்டிருந்ததாகக் கூறியிருந்தார்.

கடந்த காலங்களில் கவனத்தை ஈர்த்துள்ள சில சந்தேகத்திற்குரிய விஞ்ஞான கூற்றுகள் இங்கு உள்ளன.

மோதி கூறிய 'விநாயகர்' கதை

2014 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோதி, மும்பை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் கூட்டத்தில் இந்து கடவுளான விநாயகரின் கதையானது பழங்கால இந்தியாவில் அழகுக்கான அறுவைச் சிகிச்சை இருந்ததை காட்டுகிறது என்று கூறினார்.

"நாங்கள் விநாயகர் வணங்குவோம். மனிதனின் உடலில் ஒரு யானையின் தலையை வைத்துள்ளதன் மூலம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடைமுறைக்கு வித்திட்டுருக்க கூடிய அறுவை சிகிச்சையாளர்கள் சிலர் அப்போதே தன் முயற்சியை தொடங்கி இருந்திருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

இந்து இதிகாசங்களின்படி, சிவபெருமான் குட்டி யானையின் தலையை குழந்தையின் உடலில் இணைத்தபோது விநாயகர் உருவாக்கப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை AFP

கடந்த மாதம் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் உரையாற்றிய மேற்கு மாநிலமான குஜராத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி, இந்துமதத்தின் மிகவும் பிரபலமான தெய்வங்களுள் ஒருவரும், இதிகாச புராணமான ராமாயணத்தின் கதாநாயகருமான ராமரின் பொறியியல் திறன்களை பாராட்டினார்,

மேலும் "அவரது மனைவி சீதை ராவணரால் கடத்தப்பட்ட பின்னர், சீதையை காப்பாற்றுவதற்காக ராமர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஒரு பாலம் கட்டினார் என்று ராமாயணம் கூறுகிறது"

"இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய கடல் நீளமான பாக் நீரினை இரு நாடுகளுக்கும் இடையில் நிலப்பகுதிகளால் செய்யப்பட்ட திரள்களால் ஆன இணைப்பு உள்ளது என்பதைக் காட்டுகிறது"

"இதில் ஒரு சிறிய பகுதி உண்மையில், ராமரால் கட்டப்பட்டது பாலம் என்று பல இந்துக்கள் இன்றும் நம்புகின்றனர்."

"இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ராமர் சேது பாலத்தை உருவாக்க ராமர் எத்தகைய பொறியாளர்களை பயன்படுத்தி இருப்பார் என்பதை கற்பனை செய்து பாருங்கள். மேலும் அணில்கள் கூட தாங்களும் பாலம் கட்ட உதவின. இன்றும் மக்கள் ராமர் சேது பாலத்தின் எஞ்சிய பகுதி கடலில் இருப்பதாக மக்கள் தெரிவிப்பதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன என்று விஜய் ரூபாணி மேற்கோள் காட்டினார்.

கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தான் மாநிலத்தின் கல்வியமைச்சர் வாசுதேவ் தேவ்நானி, மாடுகளின் "விஞ்ஞான முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்" என்று கூறினார்,

படத்தின் காப்புரிமை AFP

ஏனெனில், உலகில் ஆக்ஸிஜனை உள்ளிழுத்து ஆக்ஸிஜனையே வெளியேற்றும் ஒரே விலங்கினம் அது மட்டுமே என்று தெரிவித்தார்.

தற்போதைய ஆய்வானது, பசுக்கள் உண்மையில் கார்பன் டை ஆக்சைடை மட்டுமே வெளியேற்றும் என்று நிறுவியுள்ள நிலையில் இதனை இல்லையென்று மறுக்கும் விதமாக வாசுதேவ் தேவ்நானி எந்த ஆராய்ச்சியையும் முன்வைக்கவில்லை.

அவரது கருத்துக்கள் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டபின் அவர் அதிக அளவில் விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்