ஜிமிக்கி கம்மல் வைரல்: நடனம் மூலம் நன்றி தெரிவித்த மோகன்லால்

ஜிமிக்கி கம்மல் வைரல்: நடனம் மூலம் நன்றி தெரிவித்த மோகன்லால்

யு டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட 'ஜிமிக்கி கம்மல்' பாடல் வைரலானதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடிகர் மோகன்லால் நடனமாடும் புதிய பாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது.

மோகன்லால் நடிப்பில் வெளியான 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' என்ற மலையாள படத்தில், `எண்டம்மையிட ஜிமிக்கி கம்மல்' என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இப்பாடலின் கடைசியில் இரு காட்சியில் மட்டுமே மோகன்லால் வந்திருப்பார்.

அண்மையில், கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாப்பட்டது. கொச்சியில் உள்ள 'இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்' கல்வி நிறுவனத்தின் மாணவிகள், ஆசிரியர்கள் `ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடியதுடன் அதன் காணொளியையும் யு டியூப்பில் பதிவேற்றியிருந்தனர்.

அப்போது முதல் இப்பாடல் யு டியூப், ஃபேஸ்புக் என சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. கல்லூரி மாணவிகளும், ஆசிரியர்களும் நடனமாடிய பாடல் 16 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

படத்தின் காப்புரிமை youtube/satyamvideos

மேலும், படத்தில் இடம்பெற்ற ஒர்ஜினல் பாடல் 22 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இந்நிலையில், இப்பாடலைக் கொண்டாடும் மக்களுக்கும், வைரலாக்கியவர்களுக்கு நன்றிகளைக் கூறிக்கொள்ளும் விதமாக, இந்த புதிய பாடலைப் பதிவேற்றியுள்ளனர். இப்புதிய பாடலும் யு டியூப்பில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்