காஷ்மீர்: இந்திய ராணுவ முகாம் மீது தற்கொலைதாரிகள் தாக்குதல்

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவர்கள் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption ஸ்ரீநகரில் அதிக பாதுகாப்பு நிரம்பிய பகுதியில் தாக்குதல் நடந்துள்ளது

செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி 4.00 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதலில் மூன்று இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதால்தாரிகளுடன் பாதுகாப்பு படையினர் தொடந்து துப்பாக்கி சூடு நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகர் சர்வதேச நிலையத்துக்கு வெளியே மிகவும் பாதுகாப்பு வலுவூட்டப்பட்ட பகுதியில் இந்த ராணுவ முகாம் அமைந்துள்ளது..

முன்னதாக பிபிசியிடம் பேசிய விமான நிலைய அதிகாரிகள் , விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், விமானநிலைய பணியாளர்கள் , பயணிகள் அல்லது வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்த நிலையில், விமான நிலையத்துக்கு செல்லும் சாலைகள் தற்போது திறந்து விடப்பட்டுள்ளதாக வெளியான தக்வல்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்