தமிழ்நாட்டில் டெங்கு பரவ காரணம் என்ன?

ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே உள்ள மழை காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான 5 முக்கிய காரணங்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
  • சமீப மாதங்களில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்சனையால், பெரிய கலங்களில் பொது மக்கள் தண்ணீரை சேமிக்க ஆரம்பித்தனர். நன்னீரில் மட்டுமே முட்டையிடும் இயல்புடைய டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் அவற்றில் முட்டையிட்டதால், அவகைக் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக, நல்ல மழை பெய்துள்ளதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆவதற்கு ஏற்ற சூழல் அமைந்துள்ளது.
  • ஏடிஸ் இஜிப்டி, ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற அழைக்கப்படும் டெங்குவைப் பரப்பும் இரண்டு வகைக் கொசுக்கள் மூலம் கேரளாவில் இருந்து, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதும் ஒரு காரணம் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாதது இன்னொரு காரணம் என்கிறது தமிழக அரசு.
  • காய்ச்சல் வந்தவுடன் மக்கள் மருத்துவமனைகளுக்கு வராமல், சாதாரண காய்ச்சல் என்று எண்ணி தாங்களாகவே மருந்து கடைகளில் மருந்து வாங்கி 'சுயசிகிச்சை' செய்துகொள்வது டெங்கு காய்ச்சலை தீவிரப்படுத்துகிறது.
  • முறையான பயிற்சி இல்லாதவர்கள் மற்றும் போலி மருத்துவர்களிடம் எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளால் சில நேரங்களில் டெங்கு தீவிரமடைந்து நோயாளிகளின் உடல்நிலை குணப்படுத்த முடியாத அளவு மோசமடைகிறது.

டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

பன்றிக் காய்ச்சல்: இந்த ஆண்டு இந்தியாவில் 1094 பேர் பலி

'தூய்மை இந்தியா' திட்டம்: அவலம் குறையாத துப்புரவு பணியாளர் வாழ்க்கை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்