ஜெய் ஷாவுக்காக ஆஜராகும் இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா

துஷார் மேத்தா படத்தின் காப்புரிமை Amity University
Image caption துஷார் மேத்தா

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, தி வயர் டாட்காம் இணையதளத்தின் ஆசிரியர்களுக்கு எதிராக தொடந்துள்ள அவதூறு வழக்கில், ஜெய் ஷாவின் வழக்குரைஞராக இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகப் போகிறார்.

அந்த இணையதளம் அண்மையில் ஜெய் ஷாவின் தொழிற்வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரையை தனது தளத்தில் பதிவிட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து, பா.ஜ. தலைவர்கள் ஜெய்-க்கு ஆதரவாக கருத்துக் கூற தொடாங்கினார். அந்த கட்டுரை ஜெய்க்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இட்டுக்கட்டு எழுதப்பட்டது என்றும், அவர் எந்த தவறான காரியங்களிலும் ஈடுப்படவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள்.

குஜராத்தின் நம்பிக்கைக்குரிய வழக்கறிஞர்களில் ஒருவரான துஷார் மேத்தாவை, தனது மகனுக்கு ஆதரவாக வழக்காட அமித் ஷா தேர்ந்தெடுத்தார்.

2002 கலவர வழக்குகளிலும், என்கவுண்ட்டர் வழக்குகளிலும் குஜராத் அரசு வழக்குரைஞராக ஆஜர் ஆகி இருக்கிறார் மேத்தா.

என்.டி.டி.வி-க்கு அவர் அண்மையில் அளித்த ஒரு நேர்காணலில் இந்த வழக்கு குறித்து அவர் ஆலோசித்து வருவதாகவும், ஜெய்-க்கு ஆதரவாக அவர் அஜராகலாம் என்றும் கூறியிருந்தார்.

அரசு வழக்கறிஞர் தனியார் வழக்குகளில் ஆஜராகலாமா?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 76ன்படி சொலிசிட்டர் ஜெனரல் என்பவர் இந்திய அரசின் தலைமை ஆலோசகர் ஆவார். அவரே, உச்ச நீதிமன்றத்தின் பிரதான வழக்கறிஞர். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரலுக்கு துணையாக இருப்பார் என்று விவரிக்கிறது.

மத்தியில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற உடன், மேத்தா கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக 2014-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அரசு ஒரு தரப்பாக இல்லாத வரை, அரசு வழக்கறிஞர்கள் தனியார் வழக்குகளில் ஆஜராகலாம். ஆனபோதிலும், 2014-ம் ஆண்டு மத்திய சட்ட அமைச்சகம் அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில், அரசு அல்லது அதன் அமைப்புகள் சம்பந்தப்படாத வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது. விதிவிலக்கான சூழல்களில் மட்டும், அதுபோன்ற வழக்குகளில் ஆஜராக அனுமதியளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று பிபிசி-யிடம் பேசிய அரசியலமைப்புச் சட்ட நிபுணர் சுபாஷ் காஷியப் தெரிவித்தார்.

என்.டி.டி.வி-க்கு அளித்த நேர்காணலில் மேத்தா, தான் அக்டோபர் 6-ஆம் தேதியே மத்திய சட்ட அமைச்சகத்திடம் அனுமதி பெற்றுவிட்டதாக கூறியுள்ளார்.

அப்படியானால், thewire இணையதளத்தில் அந்த கட்டுரை வெளியாவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பே மேத்த மத்திய சட்ட அமைச்சகத்திடம் அனுமதி பெற்று இருக்கிறார்.

யார் இந்த மேத்தா?

ஜாம்நகரை சேர்ந்த மேத்தா, 80-களில் வழக்கறிஞராக தன் தொழில் வாழ்க்கையை தொடங்கினார். தாலுக்கா அதிகாரியாக இருந்த அவருடைய தந்தை, இளம் வயதிலேயே ஒரு விபத்தில் இறந்தார்.

தொடக்கத்தில், கிருஷ்ணகாந்த் வகாரியா என்ற மூத்த வழக்கறிஞரிடம், இளம் வழக்கறிஞராக பணியாற்றினார்.

வகாரியா, குஜராத் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். அவர் கூட்டுறவு வங்கி மற்றும் பால் சங்கங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், அதன் சார்பாக ஆஜராகி இருக்கிறார்.

அந்த நாட்களில், குஜராத் கூட்டுறவு வங்கிகளின் பிரதிநிதியாக இருந்த அமித் ஷா-வின் தொடர்பு, மேத்தாவுக்கு ஏற்பட்டது.

நரேந்திர மோதி, குஜராத்தின் முதல்வராக பொறுப்பேற்ற உடன், சிவில் மற்றும் கூட்டுறவு வழக்குகளில் சிறந்து விளங்கிய மேத்தா, தன்னை ஒரு தீவிரமான வழக்கறிஞராக நிறுவிக்கொண்டார்.

மேத்தா, குஜராத் நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞராக 2007-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு கூடுதல் அட்வகேட் ஜெனரலாக ஆக்கப்பட்டார்.

கூடுதல் அரசு வழக்கறிஞராக, மோதி அரசாங்கத்தின் சார்பாக, சொஹ்ராபுதீன் வழக்கு உட்பட பல வழக்குகளில் மேத்தா ஆஜராகி இருக்கிறார்.

குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ராவை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோதி-க்கு உடந்தையாக மேத்தா செயல்படுகிறார் என்று குற்றஞ்சாட்டி, அரசு வழக்கறிஞர் பதவியிலிருந்து மேத்தா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினர்

முன்னாள் குஜராத் முதல்வர் சுரேஷ் மேத்தா, முன்னாள் அமைச்சர் மற்றும் முப்பையை சேர்ந்த வழக்கறிஞர் பல்வாந்த் தேசாய் ஆகியோர் துஷார் மேத்தாவுக்கு எதிராக மனு அளித்த குழுவில் இருந்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்