மோடியின் குஜராத் மாதிரியை பாதுகாக்க யோகியை இழுக்கும் பாஜக

யோகி படத்தின் காப்புரிமை SANJAY KANOJIA/AFP/Getty Images

உத்தரப்பிரதேச முதலமைச்சரும், இந்துத் துறவியுமான யோகி ஆதித்யநாத் குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு உதவுவாரா?

நடைபெற்று கொண்டிருக்கும் குஜராத் கௌரவ யாத்திரை பரப்புரைக்காக யோகியை பாரதிய ஜனதா கட்சி சேர்த்துள்ளது.

குஜராத்தின் மத்திய பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த இடமான கராம்சாதிலிருந்து அக்டோபர் முதல் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பர்டி நகரம், வல்சாத் நகரம், சிக்லி மற்றும் தெற்கு குஜராத்திலுள்ள பிற இடங்களிலும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் ஆதித்யநாத் பேசியுள்ளார். கட்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் பரப்புரையிலும் யோகி கலந்து கொள்கிறார்.

குஜராத்தின் தெற்கிலுள்ள வாக்கு வங்கியை தக்கவைத்து கொள்ளுவதற்கு பாரதிய ஜனதா கட்சி மீண்டும் இந்துத்வ கொள்கைகளை கையில் எடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, மோதிக்கு அடுத்து இரண்டாவது மிகவும் பிரபல நபராக இருந்தார்.

படத்தின் காப்புரிமை SANJAY KANOJIA/AFP/Getty Images

ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் இந்து முகமாக யோகி உள்ளார்.

அவருடைய ஆட்சியின்போது உத்தர பிரதேசத்தில் என்ன முன்னேற்றம் கொண்டுவரவிருக்கிறார் என்று நாடே பார்க்கவுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி "ஆதிவாசி யாத்திரை" மற்றும் இப்போது "கௌரவ யாத்திரை" என இரண்டு யாத்திரைகளை நடத்தியுள்ளது. இரண்டுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பில்லை. எனவே, அது இந்துத்வ முகத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக தோன்றுகிறது.

மேலும், தெற்கு குஜராத்தில் குறிப்பிடும்படியான வட இந்திய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் 15 லட்சத்திற்கு (குறிப்பாக உத்தர பிரதேசம் மற்றும் பிகாரில் இருந்து) அதிகமான வட இந்தியர்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சூரத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் தொழிலதிபர்களுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. அதில் சூரத்தில் தங்கியிருக்கும் வட இந்தியாவை சேர்ந்த வர்த்தகர்கள் கலந்து கொள்கிறார்கள்

படத்தின் காப்புரிமை SANJAY KANOJIA/AFP/Getty Images

பர்டி மற்றும் வல்சாத்தில் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட பொதுக் கூட்டங்களில் அதிக மக்கள் பங்கேற்கவில்லை.

இதில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தோர் தேர்தலின்போது போட்டியிட முயல்வோராக இருப்பதால், தங்களின் வலிமையை காட்ட விரும்புகிறவர்கள்.

ஆனால், இந்தியாவின் மிகவும் பெரிய மாநிலத்தின் முதலமைச்சர் பாலத்திற்கு அடியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றினார். இதுவே நிலைமையைக் காட்டுகிறது என்கிறார் சூரத்தின் மூத்த பத்திரிகையாளர் ஃபெய்சால் பகிலி.

வல்சாத் சாலையில் யோகி ஆதித்யநாத் சென்றபோது, சாலைகளில் மக்கள் கூட்டம் எதுவும் இல்லை. நாட்டின் ஆட்சியாளர்களை வல்சாத் முடிவு செய்யும் என்ற ஒரு தற்செயல் சம்பவம் நடந்துள்ளதாக ஃபெய்சால் பகிலி தெரிவிக்கிறார்.

"கடந்த மூன்று தசாப்த காலமாக, வல்சாதில் எந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ அந்த கட்சிதான் மத்தியில் ஆட்சியமைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images)

வல்சாதிலிருந்து நல்ல வரவேற்பு பெறுவதற்கு பாரதிய ஜனதா கட்சி போராடுகிறது என்றால், அக்கட்சிக்கு இது கவலைக்குரிய அறிகுறி" என்று பகிலி தெரிவித்துள்ளார்.

பாஜக தன்னுடைய வளர்ச்சிப் பணிகளை முன்னிருந்த விரும்பினால், ஏன் சட்டீஸ்கார் முதலமைச்சர் ராமன் சிங் அல்லது மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் போன்றோரை அழைத்திருக்கக் கூடாது? இவர்கள் தங்களுடைய மாநிலங்களில் நீண்டகாலம் ஆள்பவர்கள். தங்கள் மாநிலங்களிலே ஏதோ கொஞ்சம் செய்திருப்பவர்கள்.

அறிவியல் சார்ந்த துறையா ஜோதிடம் ? பாஜக அரசு முடிவு எழுப்பும் சர்ச்சை

தலித் பிரச்சனை: முரண்பாடுகளின் குவியலாக இந்தியா

ஆனால், பாரதிய ஜனதா கட்சி யோகி ஆதித்யநாத்தை அழைத்திருப்பது, அந்த கட்சி எதை நோக்கி சாய்கிறது என்பதை காட்டுகிறது என்ற பகிலி சுட்டிக்காட்டுகிறார்.

"முதலில், குஜராத் கௌரவ யாத்திரை பாஜகவின் பாரம்பரிய கோட்டையான சௌராஸ்டிரா பிராந்தியத்தில் நல்ல வரவேற்பை பெறவில்லை.

உண்மையில், இது ஓ.பி.சி. பிரிவின் கீழ் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு கோரி வரும் பட்டிதார்களின் (பட்டேல்) கோபத்திற்கு உள்ளானது.

படத்தின் காப்புரிமை Kevin Frayer/Getty Images

பயிர் காப்பீடு, நர்மதா நீர் உள்பட இன்னும் பல பிரச்சனைகளாலும் அரசு மீது விவசாயிகளும் கோபத்தில் உள்ளனர்.

சௌராஸ்டிரா பிராந்தியத்தில் உள்ள சில கிராமங்களில் நடந்த போராட்டத்தினால், அங்கு யாத்திரை நுழையக் கூட முடியவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் பாரம்பரிய கோட்டையாக இருக்கும் சௌராஸ்டிராவில் பாஜகவுக்கு இது நல்ல அறிகுறி அல்ல என்று ராஜ்காட்டை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கிரிட்சிங் ஸலா கூறியுள்ளார்.

"நரேந்திர மோடியின் குஜராத் மாதிரியை ஆதரிப்போராகவும், பாரதிய ஜனதா கட்சியின் அர்ப்பணிப்பு மிக்க வாக்கு வங்கியாகவும் இருப்பது இதே பட்டேதார்கள் (பட்டேல்) என்பதுதான் இதிலிருக்கும் முரண். இப்போது இவர்கள் வெளிப்படையாக 'குஜராத் மாதிரியை' விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார்கள். கௌரவ யாத்திரையை (பெருமிதப் பயணம்) மகாபாரதத்தில் வரும் 'கவுரவர்களின் யாத்திரை' என்று அழைப்பதாக ஸலா குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை தாக்குதல் நிலையில் இருந்துள்ள பாஜக தற்போது தற்காத்து கொள்ளும் நிலையில் உள்ளது. அவர்கள் மோதியின் 'குஜராத் மாதிரியை' பாதுகாக்க வேண்டியுள்ளது என்று அரசியல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்