மகாராஷ்டிராவில் மனிதரை உண்ணும் புலி மின்சாரம் தாக்கி பலி

பலி

மகாராஷ்டிராவில் நான்கு பேரை அடித்து கொன்ற பெண் புலி சனிக்கிழமையன்று மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. முன்னதாக, அதை கொல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்து இருந்தது.

காட்டுப் பன்றியிடமிருந்து நிலத்தை காப்பாற்ற விவசாயி ஒருவர் வைத்த மின்வேலியில் சிக்கி புலி பலியானதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு வயதான இப்புலியின் சடலம் மின்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டவுடன், தேடுதல் வேட்டையை நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
விலங்குகளின் இறந்த உடல்களை பதப்படுத்தும் எம்மா

வனத்துறை புலியை காக்க தவறியதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வனவிலங்கு ஆர்வலர்கள் மாநில வனத் துறை மூலம் ஜூன் 23 ம் தேதி இப்புலியை சுட்டுக்கொல்ல அளிக்கப்பட்ட ஆணையை எதிர்த்து முறையிட்டனர், ஆனால் நீதிமன்றம் வியாழக்கிழமையன்று அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தது.

கடந்த ஜூலை மாதம் இரண்டு பேரை கொன்றதுடன், நான்கு பேரை காயமடைய செய்த இப்புலி மகாராஷ்டிராவின் பிரம்மபுரியில் முதல் முறையாக அடையாளம் காணப்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

தொடர்புடைய தலைப்புகள்