#வாதம் விவாதம்: தாஜ்மஹால் காதல் சின்னமா, இல்லையா? நேயர்கள் கண்ணோட்டத்தில்...

தாஜ்மஹால் படத்தின் காப்புரிமை Getty Images

தாஜ்மஹால் இந்தியா மீது படிந்திருக்கும் கறை என்றும், இது துரோகிகளால் கட்டப்பட்டது என்றும் உத்தரப்பிரேதச பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம் கூறியிருந்தார். இக்கருத்து பலத்த சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இச்சர்ச்சை தொடர்பாக பிபிசி நேயர்கள் தங்களது கருத்துக்களை முன்வைக்குமாறு, #வாதம் விவாதம் என்ற புதிய பகுதி மூலம் பிபிசி ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று கேட்டிருந்தோம்.

இது நேயர்கள் மத்தியில் ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுத்தது. ஏராளமான நேயர்கள், தங்களது கருத்துகளை பதிவிட்டிருந்தனர். ஒவ்வொருவரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பதில் கருத்துகளும் வந்தன.

நேயர்கள் பதிவிட்டவற்றில் முக்கிய கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

''தாஜ்மஹாலை கட்டியது ஒரு முஸ்லிம் என்பதால், பி.ஜே.பி க்கு வயிறு எரிச்சல். இதில் அப்பட்டமான ஹிந்து மத வன்மம் இருக்கிறது, தவிர வேறு என்ன?" என அஜன் ஏ.ஜே என்பவர் பதிவிட்டுள்ளார்.

"நேற்று தலாக் இன்று தாஜ் மஹால், நாளை.. ஏதாவது ஒண்ணு வரும், ஹிந்து முஸ்லிம்களை பிரித்து வச்சி ஆச்சி செஞ்சாதான் மக்கள் இந்தியா பொருளாதாரம் வீழ்ச்சியைப் பத்தி பேசமாட்டார்கள், மக்களே கொஞ்சமாவது சூழ்ச்சியைப் பத்தி தெரிஞ்சுகோங்க." என முகமது யூனிஸ் என்பவர் பதிவிட்டுள்ளார்.

"ஒரு அழகான கல்லறை அவ்வளவுதான்..அண்ணா சமாதி, எம் ஜி ஆர் சமாதி போன்று தான் இதுவும்..கட்டட கலை வியக்கத்தக்க வகையில் இருப்பதால் அது பலரால் பேசப்பட்டது. இந்தியாவுக்கு ஒரு பெயர்.. ஆக்ராவுக்கு சுற்றுலா தளம்..இதற்கு ஏன் இந்த அலப்பறை என்றால் ஷாஜஹான் என்பவர் முஸ்லீம்." என நஷீர் கான் கூறியுள்ளார்.

"தாஜ்மஹால் என்பது உலகத்தின் சொத்து. அதை இந்து முஸ்லிம் என்று பார்க்கக்கூடாது. அதன் கட்டடக்கலையைப் போல் இன்னொருமுறை நிர்மாணிக்க முடியுமா? ஷாஷகானும் மும்தாஜும் இன்னொருமுறை பிறப்பார்களா? ஷாஜஹான் இன்னொருமுறை காதலுக்காக உருகுவாரா. ஷாஜஹானை அவர் மகன் கைது செய்து சிறையில் அடைத்தது இன்றுதான் அவர்களுக்குத் தெரிந்ததா. சிறந்த வல்லரசாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இவை மிகப் பெரிய அவமானம்." என வேலாயுதம் கூறியிருக்கிறார்.

''தாஜ்மஹால் காதல் சின்னம் இல்லை" என பாலாஜி கூறியுள்ளார்.

"யாரோ ஒரு அமைச்சருக்கு அந்த இடம் தேவைப்படுகிறது போல. ப்ளாட் போடுவதற்கு அரசு செலவில் இடித்து கொடுங்க" என நஸ்ருல்லா பதிவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"துரோகி என்பவர் யார் என்று முதலில் விளக்குங்கள்.அப்புறம் துரோகம் எதுவென்று நாங்கள் தெரிந்து கொள்கிறோம்..." என சிவா கூறியுள்ளார்.

"யாரால் கட்டினால் என்ன இந்தியாவிற்குத்தானே பெருமை." என பரஞ்சோதி பதிவிட்டுள்ளார்.

(முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக பிபிசி ஃபேஸ்புக் பக்கத்தின், #வாதம் விவாதம் பகுதியில் நேயர்களின் கருத்துக்களை தொடர்ந்து வரவேற்கிறோம்.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்