வாதம்-விவாதம்: பட்டாசை வெடிக்க வேண்டுமா, தவிர்க்க வேண்டுமா?

  • 19 அக்டோபர் 2017

தீபாவளி கொண்டாட்டங்களின் தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளவை பட்டாசுகள். தீபாவளி இனிப்புகளைப் போலவே பட்டாசு வெடிப்பது சிறியவர் முதல் பெரியவர் வரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒன்றாகா உள்ளது. ஆனால், பட்டாசு வெடிக்கும் வழக்கம் சமீபத்தில் வந்ததுதான் என்றும் பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்றும் கூறுவோரும் உண்டு.

படத்தின் காப்புரிமை Getty Images

பிபிசி தமிழின் இன்றைய வாதம் விவாதம் பகுதியில் "பண்பாட்டின் வடிவமாக பட்டாசு வெடிப்பது சரியா? சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்க பட்டாசைத் தவிர்ப்பது சரியா?" என்று ஃபேஸ்புக்கில் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பட்டாசு வெடிக்கும் வழக்கத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பிபிசி நேயர்கள் பதிந்துள்ள கருத்துக்களில் தேர்ந்தெடுத்து, தொகுக்கப்பட்டவை இதோ.

"பட்டாசு தொழிலில் உள்ள தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு,பட்டாசை வெடிக்காமலிருக்கலாம்," என்று கூறியுள்ளார் ராஜா மணி.

"பட்டாசு செய்யும் தொழிலாளர்களைக் காக்கவே பட்டாசு வெடிப்பவர்களாகக் காட்டிக்கொள்பவர்களே. பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் படும் மனரீதியான உடல்ரீதியான இன்னல்கள் பற்றித் துளியும் அறியாதவர்கள் நீங்கள். வெறும் கையோடு எந்த பாதுகாப்புக் கவசங்களுமின்றி வெடிமருந்தில் உழலும் ஏழைகளின் வலியறியாதோர் நீங்கள். நீங்கள் கொழுக்க வைப்பது பட்டாசு ஆலை முதலாளிகளையே. அவ்வேழேகளுக்கு வேறு வாழ்வாதாரத்தை வழங்கி அவர்களை வெடி மருந்திலிருந்து மீட்க வேண்டும். பட்டாசுத் தொழிலை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும்," என்கிறார் தேவேந்திரன் நமச்சிவாயம்.

படத்தின் காப்புரிமை Getty Images

பொங்கலே எங்கள் விழா!

"மாவீரர்களுக்கு அரக்கன் என்றும் அட்டக்கத்தி பெட்டைக்களுக்குக் கடவுள் என்று எவன் பெயர் வைத்தான்!? எவன் நலனுக்காக செய்த சூழ்ச்சி இது!? தமிழர்களைக் கேவலப்படுத்தியும் அறிவுக்கொவ்வாத கட்டுக்கதைகளைத் திணித்தும் கொண்ட்டாடப்படும் பண்டிகைகள் எதற்கு தமிழர்களின் மரபு வழி கொண்ட்டாடப்படும் பொங்கல் திருநாள் போதும் அதுவே எங்களின் முதன்மையான விழா," என்று தமிழ் அடையாளத்தை தொடர்புபடுத்தி பதிவிட்டுள்ளார் அசோக் அனிஸ்.

பட்டாசுகள் வெடிக்காவிட்டால் பிற்காலத்தில் தீபாவளி பண்டிகையே இருக்காது என்றும், முதலில் வாகனத்தை தடை செய்யுங்கள் என்றும் கூறுகிறார் மதன் சிவா,"பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்றால் ... பிற்காலத்தில் தீபாவளி என்ற பண்டிகை இருக்காது... இந்தியாவில் வந்தேரி மதத்தின் பண்டிகை தடை செய்ய யாரும் வாய் திறப்பது இல்லை... சுற்று சூழல் மாசுபடுதை தடுக்க வாகனத்தை தடை சொய்யலாம்... எல்லா பயலும் நடந்து போகட்டும்...."

மணி ராஜன் என்னும் நேயரும் அதே போன்றதொரு கருத்தை பதிந்துள்ளார், "வருடத்துககு ஒரு நாள்தான் தீபாவளி. 365 நாளும் வாகனங்கள் வெளியிடும்

கார்பன் அளவை கேட்டாலே தலை சுத்தும் அதனால் யாரும் இனிமே வாகனம் ஓட்ட வேண்டாம்."

காலத்திற்கேற்ப மாறுவது கட்டாயத் தேவை

"பண்பாடு, கலாசாரம்,சடங்கு மற்றும் சம்பிரதாயம் அனைத்தும் மனிதர்களால் உருவானது.இவைகள் அனைத்தும் அந்தந்தக்காலத்தின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது எனவே அது காலத்துக்கு ஏற்ப மாற்றப்படவேண்டியது. எனவே பட்டாசு வெடிப்பதற்க்குரிய கட்டாய தேவை ஒன்றும் இல்லை எனவே அது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும். மற்றும் இயற்கை என்பது மனிதர்களுக்கு மட்டும் இல்லை அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது," என்று பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டியதற்கான தனது வாதங்களை முன்வைக்கிறார் செந்தில் குமார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சர்வதேச கால்பந்து நட்சத்திரமான ஆப்கன் அகதி

பட்டாசுடன் எல்லோரும் மாசைத் தொடர்புபடுத்தும்போது, மயில் சாமி என்னும் நேயர் மாட்டைத் தொடர்புபடுத்தியுள்ளார், "பட்டாசு வெடித்தால் மாடு பயந்து விடும் பிறகு மாட்டை துன்புறத்துவதாக காவிகள் தாக்குவார்கள். எங்களுக்கு பட்டாசும் வேண்டாம் தீபாவளியும் வேண்டாம். மோடி என்ற நரகாசூரன் ஒழியட்டும்."

சரியல்ல என்பதே சரி!

"மத தர்க்கத்தில் நுழையாமல் பார்த்தால் சரியல்ல என்பதே சரி. மாசடைய வைக்கும் எதையும் தவிர்த்தல் நலம்," என்று தர்க்கரீதியாக அல்லாமல் தர்ம ரீதியாக கருத்தை பதிந்துள்ளார் கினி அகி எனும் ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்தும் நேயர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தீபாவளி பட்டாசுகள் மீது மட்டும் ஒரு சார்பாக பழி சுமத்தப்படுவது போல உணர்கிறார் பிரகாஷ் ராஜ் என்னும் நேயர்," பண்டிகை காலங்களில் வெடிக்கும் பட்டாசுகள் மட்டும் தான் சுற்றுச்சூழலை மாசுபடுத்துமா??????

அரசியல்வாதிகள்,ஆடம்பரவாதிகள் மற்றும் இன்னும் பலர் வருகைக்காக வெடிக்கும் பட்டாசு சுற்றுச்சூழலை தூய்மை படுத்துமா? ?????"

"சிறு வயதில் பட்டாசு வெடித்தது மகிழ்ச்சி ஆனால் பெரியவனாக மாறியதும் வீண் வேலை என தோன்றுகிறது," என்று மோகன் ராஜ் பதிந்துள்ளார்.

ஒற்றை வரியில் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர் சில நேயர்கள்.

சிவா கந்தையா: பட்டாசு இது இயற்கைக்கு வைக்கும் வேடி.

சாலைராஜன்: ஊழல் தவிர்க்க முடியாததுபோல்தான் பட்டாசும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்