டெல்லியில் பட்டாசு தடை, இந்து மதம் மீதான தாக்குதலா?

  • 20 அக்டோபர் 2017
உத்தரபிரதேசத்தில் தீபாவளி கொண்டாட்டம் படத்தின் காப்புரிமை Reuters
Image caption உத்தரபிரதேசத்தில் தீபாவளி கொண்டாட்டம்

காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்துவதற்காக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் அது சமூக வலைதளங்களில் மத ரீதியான வலுவான விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்கப்படுவதற்கு தடை விதித்தது. இது இந்துக்களின் மிகப்பெரிய திருவிழா மீதான தாக்குதல் என சிலர் இந்த தடையை பார்ப்பதற்கு இந்த தீர்ப்பானது திரி கிள்ளியிருக்கிறது.

"2 ஸ்டேட்டஸ்" மற்றும் "3 இடியட்ஸ்" ஆகிய பாலிவுட் படங்களின் பெரும் வெற்றிக்கு பின்னணியில் உள்ள எழுத்தாளர் சேத்தன் பகத் தன்னை ஒரு கோடி பேர் பின்தொடரும் டிவிட்டர் பக்கத்தில் நீதிமன்றத் தடைக்கு எதிராக தொடர்ச்சியாகப் பதிவிட்டார்.

அதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் மிகப்பெரிய விவாதம் கிளம்பியுள்ளது.

மற்றவர்கள், எப்படியிருந்தாலும், மோசமடைந்து வரும் காற்று மாசு அளவுகளை இந்த தடை உத்தாவானது குறைக்கும் என நம்புகிறார்கள்.

டிவிட்டரில் இந்த ஹேஷ்டேக் #Right2Breathe (சுவாசிப்பதற்கான உரிமை) தடைக்கு ஆதரவாக பிரதிபலித்தது. இந்த விவாதத்தில் கிட்டதிதட்ட எழுநூறு டிவீட்கள் இரு பக்க கருத்துரையாளர்களாலும் நிரம்பியது.

ராஜஸ்தான் அரசின் ஒரு செயலாளரான சஞ்சய் தீட்சித், இந்தத் தடையை விமர்சித்துள்ளார்.

''நாம் நேரத்தை மதிக்கின்ற பழக்கவழக்கங்களில் இருந்து கலாசாரத்தை கற்றுக்கொள்ளப் போகிறோமா அல்லது நீதிமன்றங்களால் அவை கற்பிக்கப்படவுள்ளனவா? இந்தியர்களுக்கு விழிப்புணர்வூட்டி அதிக சத்தமான பட்டாசு வெடிக்கப்படுவதை ஒழுங்குபடுத்த ஒரு சிறிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தால் அது நல்ல படியாக அமைந்திருக்கும் '' என அவர் கூறியுள்ளார்.

ஆனால், மோசமான சுவாசநிலையுடன் வாழ்பவர்கள் அல்லது இளம் குழந்தைகளுடன் வசிப்பவர்களுக்கு வாணவேடிக்கை மீதான இந்த தடையானது சரியான அர்த்தத்தை தருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வாண வேடிக்கை

இந்திய உச்சநீதி மன்றத்தின் முன் வாதாடிய வழக்குரைஞரான பல்லவி பிரதாப் இது குறித்து பேசுகையில் ''சுத்தமான சுற்றுச்சூழலை ஏற்படுத்த இந்த தடையானது ஒரு சிறு தியாகம்'' என்கிறார்

சில வருடங்களுக்கு முன்னாள் தீபாவளியில் பட்டாசு விபத்தில் கிட்டத்தட்ட பார்வையற்றவராகவும் மற்றும் நிரந்தர தழும்புகள் கொண்டவரானவர் பல்லவி பிரதாப்.

''கலாசாரத்தை நிலைநிறுத்த பட்டாசு வெடிப்பது ஒரே வழியல்ல. என்னுடைய மருமகள் சுவாச கோளாறுகளால் குறிப்பாக தீபாவளியை ஒட்டிய நாட்களில் கடுமையாக பாதிக்கப்படுவார். அவள் மூச்சுவிட கையடக்க கருவியான நெபுலைசர் தேவைப்படுகிறது'' என்கிறார் அவர்.


தடை உத்தரவு குறித்த விவரங்கள் என்ன ?

  • தலைநகர் டெல்லிமற்றும் சுற்றுப்புறப் பகுதியில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி வரை காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியாக பட்டாசுகள் விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
  • கடந்த வருடம் தீபாவளியின் முடிவில் அடுத்ததடுத்த நாட்களில் காற்று மாசு அளவு மூன்று மடங்கு அதிகரித்தது.
  • இந்தியாவின் மொத்த பட்டாசு சந்தையில் கிட்டத்தட்ட 25 சதவீத அளவு, டெல்லி பெருநகரில் உள்ளது.
  • எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தியின்படி இந்த தடை, சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தை பாதிக்கும்.
  • தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடிப்பதற்கு பதிலாக வேறு சில வழிகளில் சம அளவு முக்கியத்துவதுடன் கொண்டாட முடியும் என நீதிமன்றம் பகுத்தறிவோடு கூறியுள்ளது.

வாண வேடிக்கை பட்டாசுகளும் தீபாவளியும் எப்படி இணைக்கப்பட்டுள்ளது?

டிவிட்டரில் சேத்தன் பகத் உள்ளிட்ட பல பயனர்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத்தடை விதிப்பது கிறிஸ்துமஸ் அன்று கிறிஸ்துமஸ் மரங்களை வைக்க தடை விதிப்பது போன்றதாகும் என கூறியுள்ளனர்.

தீபாவளி எப்படி கொண்டாடப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் நம்மிடம் இல்லை.

மேலும் வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் இந்த கொண்டாட்டங்கள் வெவ்வேறாக உள்ளன என பரூவா கூறியுள்ளார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் வாண வேடிக்கையை பயன்படுத்துவது என்பது பரவலாக வட இந்திய நிகழ்வு என அவர் கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் பிரேமா பக்ஷி உள்ளிட்ட சில டிவிட்டர் பயனர்கள் இந்த தடை உத்தரவு குறித்த விவாதத்தில் பட்டாசுக்கும் தீபாவளிக்கும் தொடர்பு பற்றி பல்வேறு கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் புளோரிடா பல்கலைகழகத்தின் மதம் குறித்த பேராசிரியரான வசுதா நாராயணன் கிறிஸ்துமஸ் மரம் குறித்து மேற்கோள்களை ஒப்புக்கொண்டுள்ளார். இந்துமதம் தொடர்ந்து மாற்றங்களை கொண்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

கிறிஸ்துவின் பிறப்புக்கும் கிறிஸ்துமஸ் மரத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது பிற்பாடு உள்ளே நுழைந்தது . அது போலவே பட்டாசுகளும் என்கிறார் நாராயணன்.

சுற்றுச்சூழல் கவலைகள் உயர்வு

அரசியலுக்கு அப்பாற்பட்ட நபர்கள் மத்தியில், தாராளவாத செய்தி நிறுவனமான 'தி பிரிண்ட்' நிறுவினர் சேகர் குப்தா உள்பட பலர் இந்த தடைக்கு எதிராக பேசியுள்ளனர்.

இந்த தடையானது எந்த சுற்றுசூழல் கவலைகள் குறித்தும் முறையாக கையாளவில்லை எனக் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் சியாட்டிலும், இந்தியாவில் குர்கானிலும் வசிக்கும் ஒரு தொழில்நுட்ப தொழிலபதிரான சங்கராந்த் சனு இந்த தடையை எதிர்ப்பவர்களில் ஒருவர் ஆவார்.

இந்த தடையானது ' சமமற்றது' என அவர் பிபிசி டிரெண்டிங்கிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

''கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுகளில் இந்த தடை தளர்த்தப்பட்டது. ஆகவே இது வாண வேடிக்கை பட்டாசுகளுக்கான தடை அல்ல. ஆனால் இது தீபாவளிக்கான தடை'' என அவர் கூறியுள்ளார்.

'' நான் சுற்றுச்சூழலுக்காக கடுமையாக குரல் கொடுப்பவன். நான் சைவ உணவுகளை உண்பவன். அசைவம்தான் உலக வெப்பமயமாதலுக்கான ஒரு மிகப்பெரிய காரணி. நான் கிட்டத்தட்ட நான்கு வருடமாக மின்சாரத்தில் ஓடும் காரை பயன்படுத்தி வருகிறேன். ஆனால் டெல்லியின் காற்று மாசானது பட்டாசுகளால் கொஞ்சம்தான் பாதிக்கப்படக்கூடியது'' என்கிறார் சங்கராந்த்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தீபாவளியில் தீபம் ஏற்றி வழிபடும் முறை

காற்று தரக் குறியீட்டை வெளியிடும் குழுவானது டெல்லியில் காற்று மிகவும் ஆரோக்கியமற்றதாக இருப்பதை பல்வேறு அதிகாரப்பூர்வமான புள்ளி விவரங்களோடு எடுத்துக்கூறியுள்ளது.

இந்த நிலையில், ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் சுவாசநோய் உள்ள குழந்தைகளை வீட்டுக்கு வெளியே நேரம் செலவழிக்க விட வேண்டாம் என பெற்றோர்களுக்கு சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தரவுகளின் அடிப்படையில் டெல்லி மாசு கட்டுப்பாடு குழுவானது இந்நிலையானது குளிர்கால மாதங்களில் மிகவும் மோசமான நிலைக்குச் செல்கிறது, குளிர்ந்த காற்றானது புகையை தரைமட்டத்துக்கு நெருக்கமாக கொண்டுவந்துவிடுகிறது எனக்கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்