#வாதம் விவாதம்: நிலவேம்பு Vs அலோபதி - பிபிசி நேயர்களின் ஆதரவு எந்தப் பக்கம்?

டெங்கு படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் டெங்கு நோயின் தாக்கத்தால் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், அதற்கான சிகிச்சை முறை குறித்த சர்ச்சை, உண்மையான பிரச்சனையை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.

நோயின் அறிகுறி தெரியும் போதே உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டெங்குவிற்கு நிலவேம்புக் குடிநீரை மருந்தாக குடிப்பதை அரசு ஊக்குவிப்பதோடு, பல இடங்களில் முகாமும் நடத்தியது. நிலவேம்புக் குடிநீரை குடிப்பதனால் நோய் தீர்ந்துவிடுகிறதா இல்லையா என்ற கேள்வியும் சமீபத்தில் எழுந்துள்ளது.

பிபிசி தமிழில் வாதம் விவாதம்'பகுதியில், சித்த மருத்துவத்தில் உள்ள நிலவேம்புக் குடிநீரை டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்துவது சரியா? நவீன மருத்துவமான அலோபதி இருக்கும் போது நிலவேம்புக் குடிநீரை நிராகரிப்பது சரியா? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, அலோபதி மற்றும் நிலவேம்புக் குடிநீர் குறித்து மக்கள் பகிர்ந்துள்ள கருத்துக்களில் சிலவற்றைப் பார்க்கலாம்.

`அறிவியல் ரீதியாக ஒன்று நிரூபிக்கப்படாதவரை, அடுத்தவன் சொல்வதை நம்பு என்ற நிலைதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசும் இதற்கு உடந்தையாக இ௫ப்பதுதான் ஆச்சரியம்` , என்ற கருத்தை முன்வைத்துள்ளார் மகா நடராசா.

நிலவேம்பு நோயை தீர்க்கும்

`நிலவேம்பு கஷாயத்தில் வதந்தியை கிளப்புபவர்கள் யாராக இருந்தாலும் சமூகவிரோதிகளுக்கு ஆதரவானவர்கள்தான்! நிலவேம்பு கஷாயம் முற்றிலும் பாதுகாப்பான எதிர்ப்பு மருந்து` என்று தெரிவித்துள்ளார் தமிழ் செல்வன்.

`நிலவேம்பு கசாயம் ஆரோக்கியமானது,வீண் வதந்திகளை பரப்புகிறார்கள்` என்று பதிவிட்டுள்ளார் விரமணி மெக்கானிக்கல்.

அலோபதியை காப்பாற்றுவதற்கான சதி

`மக்களின் பார்வை சித்த மருத்துவம் பக்கம் திரும்பிவிடாமல் இருக்க ஆங்கில மருந்து மாஃபியாக்களின் திட்டமிட்ட சதியாகவே தோன்றுகிறது. இதற்கு உடந்தையாக எலும்புத்துண்டுக்கு ஆசைப்படும் போலி சித்த மருத்துவர்களின் சமூக வலைதள பொய் பிரசாரங்கள்` என்று தெரிவித்துள்ளார் அர்த்தநாரீஸ்வரன்.

` பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெயைமார்க்கட் செய்யும் நோக்கில் பல ஆயிரம் ஆண்டுகளாக குழம்பு தாளிப்பு, வீடு மற்றும் கடைகளில் செய்யப்படும் பலகாரம் ஆகிய அனைத்திற்கும் உபயோகப் படுத்தப்பட்டு வந்த கடலை எண்ணெய் உடல் நலத்திற்கு கேடு என்று கார்பரேட் கம்பெனிகள் விளம்பரம் செய்யவில்லையா?அதைப் போலவே இன்று அலோபதி மருந்து விற்பனை படுத்துவிடக் கூடாது என்ற கார்பரேட்டுகளின் ஆதங்கமே காரணம். தயவுசெய்து மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள்` என்கிறார் சின்னப்பையன்.

இதே போன்ற கருத்தை தெரிவித்துள்ள சுப்புராஜ், `தமிழ் மருத்துவமே, உணவே மருந்து மருந்தே உணவு. இதில் எங்கு பக்கவிளைவுகள் வரபோகிறது. இந்த விவாதமே பண்னாட்டு சதி` என தெரிவித்துள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சூரிய விசை மின்சாரம் தயாரிக்கும் சாலை

மரணங்கள் தொடர்வது ஏன்?

`கசாயம் குடித்தும் இறப்பு எண்ணிக்கை 160 ஐ தாண்டியுள்ளதே...` என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் லிபின்.

அருகம்புல் பவுடரை விட...புல்லில் அரைக்கும் சாற்றுக்கு பவர் அதிகம் எனும்போது... நிலவேம்பு எந்த அளவு சிறப்பு,,,சரி...தினந்தோறும் நிலவேம்பு குடித்தும்...இறப்பு விகிதம் கூடிக்கொண்டே இருப்பது... நம்பகத்தன்மையை சந்தேகம் கொள்ள வைக்கிறது..., காய்ச்சிய நீரே 3 மணி நேரத்தில் காலாவதி ஆகும்போது,,அரைத்த பவுடர்? என்ற கேள்வியை முன்வைக்கிறார் விவேகானந்தன்.

நோயின் மூலக்கூறை கண்டுபிடியுங்கள்

நோயின் மூலக்கூறு அசுத்தத்தில் உள்ளது அதை சீர்படுத்தாமல் நோய் மறைதற்கில்லை எனவே சாதா வேம்பா ?நில வேம்பா ? விவாதத்திற்கு இடமில்லை` என்கிறார் லசர் அந்தோனிபிள்ளை.

மருந்தை விட்டுவிட்டு முதலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதற்கு நல்ல உணவு வகைகளை உண்ணவும்..பின்னர் நோயை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.. என்ற கருத்தை முன்வைத்துள்ளார் தினேஷ் குமார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

தொடர்புடைய தலைப்புகள்