கந்துவட்டி பிரச்சனையால் தீக்குளித்த குடும்பத்தில் தாய், குழந்தை பலி

கந்துவட்டி பிரச்சனையால் தீக்குளித்த குடும்பத்தில் தாய், குழந்தை பலி படத்தின் காப்புரிமை JAFFAR

திருநெல்வேலியில் திங்களன்று கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளித்த குடும்பத்தினரில், தந்தை எசக்கிமுத்துவை தவிர அவரது இளைய மகள் மற்றும் மனைவி சுப்புலட்சுமி ஆகியோர் இறந்துவிட்டனர்.

திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைதீர்ப்பு முகாம் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த எசக்கிமுத்து மற்றும் அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் அவரது இரண்டு பெண் குழந்தைகள் (2 வயது சரண்யா, 4 வயது அட்சயபரணிக்கா) ஆகியோர் தங்களை தீயிட்டுக் கொளுத்திக்கொண்ட சம்பவம், காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பானது.

எசக்கிமுத்து மற்றும் மூத்த மகள் சரண்யா மட்டும் அபாய கட்டத்தில் உள்ளதாகவும், அவரது மனைவி மற்றும் இரண்டாவது குழந்தை இறந்துவிட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

எசக்கிமுத்து ஏற்கனவே அளித்துள்ள புகாரில் குற்றம்சாட்டப்பட்ட முத்துலட்சுமி என்பவரை கைது செய்து விசாரணை செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த எசக்கிமுத்து குடும்பத்திற்கு ரூ.1.40 லட்சத்தை அவரது உறவினர் முத்துலட்சுமி என்பவர் அளித்ததாகவும், அதற்கு வட்டியாக இரண்டு லட்சம் செலுத்தியபிறகும் மேலும் பணம் கொடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டதால் எசக்கிமுத்து குடும்பத்தினர் தீக்குளித்ததாக, சம்பவம் நடந்தபிறகு அவரின் உறவினர் கோபி ஊடகங்களில் பேசியபோது குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்